திருவள்ளூர்: 70க்கும் மேற்பட்ட திரையரங்குகள் 27ம் தேதி திறப்பு

திருவள்ளூர்: 70க்கும் மேற்பட்ட திரையரங்குகள் 27ம் தேதி திறப்பு
X

திருவள்ளூரில் உள்ள திரையரங்குகளில் கிருமிநாசிக் கொண்டு தூய்மை செய்யும் பணிகள் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டத்தில் 70க்கும் மேற்பட்ட திரையரங்குகள் 27ம் தேதி திறக்கப் போவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக திரையரங்குகள் அனைத்தும் கடந்த 4 மாதங்களாக மூடப்பட்டு கிடந்தன. கொரோனாவின் பாதிப்பு குறைந்து வரும் சூழ்நிலையில் தமிழக அரசின் உத்தரவின் பெயரில் திரையரங்குகளில் 50சதவீதம் இருக்கைகளுடன் சமூக இடைவெளியை பின்பற்றி பார்வையாளர்கள் இன்று முதல் அனுமதிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

இருப்பினும் தற்போது புதிய திரைப்படங்கள் ஏதும் வெளிவராத காரணத்தினாலும் தொற்று பாதிப்பு காரணமாக பார்வையாளர்கள் குறைவாக வருவார்கள் என்பதை கருத்தில் கொண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 70க்கும் மேற்பட்ட திரையரங்குகள் இன்று திறக்கப்படவில்லை.

திருவள்ளூரில் உள்ள துளசி, ராக்கி, மீரா, வெங்கடேஸ்வரா உள்ளிட்ட மற்றும் மாவட்டத்தில் எந்த திரையரங்குகளும் திறக்கப்படாததால் திரையரங்குகள் வெறிச்சோடி கிடக்கின்றன. இந்த மாவட்டத்தில் உள்ள திரையரங்குகள் அனைத்தும் 27 ம் தேதி திறக்கலாம் என்று கூறப்படுகிறது.

Tags

Next Story
ai in future agriculture