கடம்பத்தூர் ஒன்றியத்தில் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிறந்தநாள் கொண்டாட்டம்..
![கடம்பத்தூர் ஒன்றியத்தில் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிறந்தநாள் கொண்டாட்டம்.. கடம்பத்தூர் ஒன்றியத்தில் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிறந்தநாள் கொண்டாட்டம்..](https://www.nativenews.in/h-upload/2022/12/09/1627276-img-20221209-wa0030.webp)
உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
திமுக இளைஞரணி செயலாளரும், சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் திமுகவினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், திருவள்ளூர் மேற்கு மாவட்டம், கடம்பத்தூர் மேற்கு ஒன்றியம் திமுக சார்பில், உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிறந்த நாளை முன்னிட்டு, திமுக ஒன்றிய செயலாளர் ரமேஷ் தலைமையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில், திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக மாவட்ட செயலாளரும், திருத்தணி சட்டமன்ற உறுப்பினருமான சந்திரன், திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு கூவம் ஊராட்சியில் ஒன்றிய கவுன்சிலர் சுபாபிரியாசக்திதாசன் ஏற்பாட்டில் திமுக கொடியேற்றினர்.
மேலும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். இதுதவிர, மரக்கன்று நடவு செய்தல், பள்ளி மாணவருக்கு சைக்கிள் வழங்கல், ஏழைகளுக்கு தையல் இயந்திரம் வழங்கல், துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவச சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கொண்டஞ்சேரி ஊராட்சியில் ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் மனோஜ் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. மேலும், மாற்றுத்திறனாளிக்கு இலவச ஸ்கூட்டர், தூய்மை பணியாளர்களுக்கு சேலை, முதியோருக்கு அறுசுவை உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
கொட்டையூர் ஊராட்சியில், ஒன்றிய கவுன்சிலர் கார்த்திகேயன் ஏற்பாட்டில் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டது. கண்ணூர் ஊராட்சியில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராஜா ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு அறுசுவை உணவு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
ஏறையமங்கலம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பரிமளா சிவகுமார் ஏற்பாட்டில் சாந்தோம் ஆதரவற்ற பள்ளியில் 80-க்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, முன்னதாக தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கொண்டாஞ்சேரி மற்றும் ஏறையமங்கலம் ஆகிய பகுதியில் கட்டப்பட்ட பேருந்து நிழற்குடையை ஒன்றிய குழு துணை தலைவர் சரஸ்வதி ரமேஷ் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சிகளில், மாவட்ட துணைச் செயலாளர் ஜெயபாரதி, ஒன்றிய செயலாளர் அரிகிருஷ்ணன், நிர்வாகிகள் கோதண்டம், சரஸ்வதி சந்திரசேகரன், பாபு, கோபால், மாணிக்கம், காமராஜ், ஏகாம்பரம், ஊராட்சி மன்ற தலைவர் ஜானகி அகஸ்டின், தமிழ்மொழி, ஜெயந்திமோகன், ஆறுமுகம், காஞ்சிபடி சரவணன், சிவாகுமார், டேனியல், கண்ணதாசன், உமா மணிவண்ணன், சண்முகம், முத்து, சரத்குமார், எல்.பிரபாகரன், பிரவின், சிந்தியா ரூபாஸ், மதன்ராஜ், சி.கார்த்தி, அன்பு, உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu