கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றார் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்

கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றார் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்
X
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார்.
கிராம சபை கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம், காரணி ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஊராட்சி, கிராம சேவை மைய கட்டிட வளாகத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பொதுமக்களிடம் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்து, பொதுமக்களிடையே மனுக்களை பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமாமகேஸ்வரி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சி.ரூபேஷ், கும்மிடிப்பூண்டி ஒன்றியக் குழுத் பெருந் தலைவர் சிவகுமார், கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாசுதேவன், செல்வகுமார், கும்மிடிப்பூண்டி தாசில்தார் கண்ணன், காரணி ஊராட்சி மன்ற தலைவர் பத்மாவதி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நீர்நிலைகளின் கரைகளில் 1.5 லட்சம் எண்ணிக்கையில் பெருமளவு பனை விதைகள் நடும் பணிகளை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைக்கும் விதமாக பனை விதைகளை நடவு செய்தார்.

Tags

Next Story