திருவள்ளூரில் அமைச்சர் நாசர் தலைமையில் கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டம்!

திருவள்ளூரில் அமைச்சர் நாசர் தலைமையில் கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டம்!
X

திருவள்ளூர் கொரோனா தடுப்பு குறித்து அமைச்சர் நாசர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆலோசனை கூட்டம் தமிழக பால்வளத் துறை அமைச்சர் சா.மு நாசர் தலைமையில் நடைபெற்றது.

தமிழகத்தின் இரண்டாவது வேகமாக பரவி வருகிறது. இந்த சூழலில் தமிழக அரசு சார்பில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னையில் படிப்படியாக கொரோனாவின் தாக்கம் குறைந்து உள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும் சென்னையை அடுத்த புறநகர மாவட்டமான செங்கல்பட்டு, திருவள்ளூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது .

இதனை கருத்தில் கொண்டு இன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து இன்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா மற்றும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை அதிகாரிகள் முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!