முதன்மையானவர் முதலமைச்சர். எம்.எல்.ஏ.நாசர் புகழாரம்.

முதன்மையானவர் முதலமைச்சர். எம்.எல்.ஏ.நாசர் புகழாரம்.
X

எம்எல்ஏ சா.மு. நாசர்

முதன்மையானவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! என திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளர் ஆவடி சா.மு.நாசர் எம்.எல்.ஏ புகழாரம்

திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் எம்.எல்.ஏ விடுத்துள்ள அறிக்கை வருமாறு.

தமிழ்நாடு முழுவதும் உள்ள 31.000 பள்ளிகளில் 17 லட்சம் மாணவ மாணவிகள் பயன்பெறும் விதமாக தமிழ்நாடு முழுவதும் விரிவு படுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் தனது திருக்கரங்களால் அற்புதமான காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்

அதாவது இதுக்கு முன்னாடி நைட்டு மிச்சமான சாப்பாடு தான் வீட்ல இருக்கும். ஆனா இப்போ? என பள்ளிக் குழந்தை தனது மழலை வார்த்தையால் பேசுவதை கேட்கும் போது இருக்கும் மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தை இல்லை. அதுதான் முதலமைச்சரின் சமூக சிந்தனை. அவரது சீரிய செயல்பாடு.

பசிப்பிணி என்பதையே மாணவச் செல்வங்கள் அறியக்கூடாது. அறிவுப்பசி ஒன்றே அவர்களுக்கு வேண்டும்! என்ற உயர்ந்த சிந்தனையோடு செயல்படுவர் முதலமைச்சர். அதன் தொடர்ச்சியாக, இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்தியிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த காலை உணவுத்திட்டத்தைப் பற்றி சொல்வதற்கு ஏராளமான அம்சங்கள் உண்டு. ஏனென்றால் இது ஏற்படுத்தியிருக்கிற தாக்கம் அந்தளவிற்கு பெரியது.

அரசுப் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் பெரும்பாலோனோர் காலை உணவை சரியாக எடுத்துக்கொள்வதில்லை என்ற தகவல் காதில் விழுந்தவுடனேயே முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்தியவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதுமட்டுமல்ல திருக்குவளையில் பிறந்து தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையை அனைத்து வகையிலும் மேம்படுத்திய முத்தமிழறிஞர் கலைஞர் படித்த தொடக்க பள்ளியில் இந்த சிறப்பான திட்டத்தை விரிவாக்கம் செய்திருக்கிறார்.

குழந்தைகளின் பசியை போக்கும் உன்னத திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம். அது மக்களுக்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்த கலைஞரின் சீரிய சிந்தனையின் தொடர்ச்சி என்பதை நினைவூட்டும் வகையிலேயே கலைஞர் படித்த தொடக்க பள்ளியில் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

நேற்று தமிழ்நாட்டில் அதிகம் பேசப்படும் ஒன்றாக இத்திட்டம் மாறியிருக்கிறது. முதலமைச்சரின் இந்த அறிவுப் புரட்சியை ஊடகங்கள் தொடர்ச்சியாக பேசி வருகின்றன. சமூக ஊடகங்களில் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்படுவது ட்ரென்ட் ஆகி வருகின்றன. அதுமட்டுமா, எதிர்க்கட்சிகளும் இந்தத் திட்டத்தை பாராட்டி வருகின்றன.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை இந்தியாவே ஆர்வத்துடன் பார்க்கிறது. இப்படிப்பட்ட மகத்தான திட்டம் உதித்தது முதலமைச்சரின் சிந்தனையில். ஆனால், அதற்குரிய பாராட்டுகளை அவர் மட்டுமே தனியாக பெற்றுக்கொள்ள நினைக்கவில்லை. அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் தங்களுடைய பகுதியில் இருக்கும் பள்ளியில் தொடங்க வேண்டும் என்றார். திமுக பிரதிநிதிகளுக்கு மட்டும் சொல்லவில்லை.

காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என கூட்டணி கட்சிகளையும், எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் அ.தி.மு.க., பாஜக, பாட்டாளி மக்கள் கட்சியையும் கேட்டுக் கொண்டார். அதன் தொடர்ச்சியாகவே முதலமைச்சரின் அழைப்பை ஏற்று எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஒருவரும் காலை உணவுத் திட்டத்தை தனது தொகுதியில் தொடங்கி வைத்துள்ளார். ஏனென்றால் இது அனைவருக்குமான ஆட்சி. அனைவரையும் உள்ளடக்கிய அரசு.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்தி மக்களின் தலைவர் என்பதை மீண்டும் நினைவு படுத்தி யுள்ளார். திருக்குவளையில் முத்தமிழறிஞர் கலைஞர் படித்த பள்ளியில் விரிவாக்கம் செய்து, தமிழனத் தலைவருக்கு நன்றிக் கடைமையாற்றியுள்ளார். இந்தத் திட்டத்தில் அனைத்து மக்கள் பிரதிநிதிகளையும் பங்கெடுக்க வைத்து தலைவர் என்பதை நிருபித்துள்ளார்.

அதுமட்டுமல்ல கூட்டணி கட்சியினரையும், எதிர்க்கட்சியினரையும் இந்த மகத்தான திட்டத்தை முன்னெடுக்க வைத்து அனைவருக்கும் பாராட்டுகளையும், பெருமைகளையும் பகிர்ந்துள்ளார். இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் இத்திட்டத்தை செயல்படுத்தும் எண்ணத்தை ஏற்படுத்தியதன் மூலம் நாட்டிற்கே முதன்மையானவராகியிருக்கிறார் நம்முடைய தலைவரும் முதலமைச்சருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.

திருக்குவளையில் நேற்று காலை உதித்துள்ள சூரியனின் சுடர் ஒளி தமிழ்நாடு முழுவதும் வீசியுள்ளது. நாளை இந்தியா முழுமைக்கும் வெளிச்சம் பாய்ச்சும்!. என முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான ஆவடி சா.மு.நாசர் தமது அறிக்கை வாயிலாக தெரிவித்தனர்.




Tags

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..!