திருவள்ளூர்: இருசக்கர வாகனத்தில் சுற்றிய 2000 பேர் மீது வழக்கு பதிவு!

திருவள்ளூர்:  இருசக்கர வாகனத்தில் சுற்றிய 2000 பேர் மீது வழக்கு பதிவு!
X

தீவிர வாகன சோதனையில் திருவள்ளூர் போலீசார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த 2000 பேர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இந்த சூழலில் தமிழக அரசு நேற்று முதல் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. முழு ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு கடைகள் அனைத்தும் மூடப்பட்டு, காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் நேற்று, தமிழகம் முழுவதும் ஈடுபட்டிருந்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 1400 காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டு, திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வந்தனர்.

இருப்பினும் முழு ஊரடங்கை மீறி இருசக்கர வாகன ஓட்டிகள் சுற்றி தெரிந்தவர்கள் மீது காவல்துறையினர் 2000 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்