திருவள்ளூர்: தொழிலாளர்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்கிய அமைச்சர்
நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் கணேசன்.
Thiruvallur News Today -திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பாக நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தலைக்கவசம், முகக்கவசம், பாதுகாப்பு காலணி, வெல்டிங் முககவசம், ஜாக்கெட், மின்பாதுகாப்பு காலணி, கையுறை, ரப்பர் காலணி உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு உபகரணங்களை அமைச்சர் கணேசன் வழங்கினார்.
மேலும், ரூ. 2.10 கோடி மதிப்பீட்டில் 11,637 தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழக முதல்வர் நலிவடைந்த தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக பல்வறு திட்டங்களை தீட்டி அதனை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார்கள். கொரோனா நோய்த் தொற்று மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், நோய்த்தொற்று பாதித்தவர்களை மருத்துவமனையில் சேர்ப்பதற்கு படுக்கை வசதி இல்லை. அப்படி படுக்கை வசதி இருந்தால் ஆக்சிஜன் வசதி இல்லை. மனைவி, மக்கள் மற்றும் உறவினர்கள் ஆதரவும் கிடைக்காமல் இருந்த காலகட்டங்களில் தான் தமிழக மூத்தவராக ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார்.
அதன் பிறகு, இந்த கொரோனா நோய்த்தொற்றிலிருந்து தமிழக மக்களை பாதுகாப்பதற்கு தேவையான உபகரணங்கள், மருந்துகள், தடுப்பூசிகள் போன்றவற்றை போர்க்கால அடிப்படையில் பெற்று தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதிகமான நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதன் காரணமாக கொரோனா நோய்த்தொற்றை படிப்படியாக கட்டுக்குள் கொண்டு வந்தார்.
அதனடிப்படையில், தொழிலாளர் நலத்துறையின் சார்பில் தொழிலாளர்களின் கோரிக்கை மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை விரைந்து முடித்திட அறிவுரை வழங்கியுள்ளார். அதனப்படையில் 90 சதவிகித தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பெண்களுக்கு மகப்பேறு உதவித்தொகையாக ரூ.18,000 உயர்த்தப்பட்டுள்ளது. திருமண நிதி உதவி தொகையாக ரூ. 20,000 உயர்த்தப்பட்டுள்ளது மற்றும் ஒரு பெண் ஆட்டோ ஓட்டுநராக இருக்கும் பட்சத்தில் ஆட்டோ வாங்கி கொள்வதற்கு ரூ. 1 லட்சம் மானியமாகவும் வழங்கப்படுகிறது. இதுபோன்று இந்த வருடம் 500 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆட்டோ வாங்;கி கொள்வதற்காக தலா ரூபாய் ஒரு லட்சம் வீதம் ரூ. 5 கோடி நிதி வழங்கப்படவுள்ளது.
திருவள்ளுர் மாவட்டத்தில் கட்டுமானம் தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் என 11,637 தொழிலாளர்களுக்கு ரூ.2.10 கோடி மதிப்பீட்டில் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தலைக்கவசம், முகக்கவசம், பாதுகாப்பு காலணி, வெல்டிங் முககவசம், ஜாக்கெட், மின்பாதுகாப்பு காலணி, கையுறை, ரப்பர் காலணி உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு உபகரணங்களும், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இவ்விழாவில், கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் பொன்குமார், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆல்பி ஜான் வர்கீஸ், திருவள்ளுர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், கிருஷ்ணசாமி, திருத்தணி சந்திரன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் உமா மகேஸ்வரி, திருவள்ளுர் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கௌரி ஜெனிஃபர், உதவி ஆணையர் (அமலாக்கம்) சுதா, பல்வேறு தொழிலாளர்கள் சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu