தொண்டு நிறுவனம், தனியார் மருத்துவக் கல்லூரி சார்பில் தொழுநோயாளிக்கு சிகிச்சை
திருவள்ளூரில் தொண்டு நிறுவனம், தனியார் மருத்துவக் கல்லூரி சார்பில்தொழுநோயால் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை நிதியுதவி வழங்கப்பட்டது.
ரைசிங் ஸ்டார் அவுட்ரீச் இந்தியா தொண்டு நிறுவனம் மற்றும் சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருவள்ளூரில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு.நிவாரணம் வழங்கப்பட்டது.
திருவள்ளூரில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட தொழுநோயால் பாதிக்கப்பட்ட மாற்று திறனாளி மக்களுக்கு திருவள்ளூரில் அமைந்துள்ள திருவள்ளுவர் மாற்றுத் திறனாளிகள் நலச்சங்க அலுவலகத்தில் சங்க தலைவர் குலோத்துங்கன், தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு, மற்றும் ஆண்களுக்கு வேட்டி,துண்டு, பெண்களுக்கு புடவை, போர்வை ஆகியவை வழங்கப்பட்டது.பின்னர் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு லாவண்யா குடும்பத்தினர் மற்றும் ஆவடி OCF லூகாஸ் ஶ்ரீதரன் கேக் வெட்டி கொண்டாடி அனைவருக்கும் மதியம் உணவு வழங்கினார்,
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக டாக்டர் அமுதா, தொழுநோய் பிரிவு கூடுதல் இயக்குனர் , டாக்டர் ரேணுகா ராமகிருஷ்ணன்,மாவட்ட மாற்றுதிறநாளிகள் நல அலுவலர ச.சீனிவாசன், டாக்டர் வசந்தி , மாவட்ட சமூக நல அலுவலர் சுமதி, IRCDS தொண்டு நிறுவன கல அலுவலர் வேலாங்கண்னி ஆகியோர் பங்கேற்று பங்கேற்று இலவசமாக மருத்துவ முகாம் நடைபெற்றது இதில் கலந்து கொண்ட தொழுநோய் மாற்றுத்திறனாளிகளுக்கு மாத்திரை மருந்துகள் வழங்கப்பட்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu