மேம்பாலத்தின் கொட்டும் கீழ் குப்பை கழிவுகளால் துர்நாற்றம்
பெரியபாளையம் மேம்பாலத்தின் கீழ் குப்பை கழிவுகளால் தொற்று நோய் ஏற்படும் அபாயம்
பெரியபாளையம் அருகே ஆரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் கீழ் கொட்டப்படும் குப்பை, இறைச்சி, கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று பரவும் அபாயத்தை தடுக்க . உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் ஊராட்சியில் சுமார் 12,000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் காவல் நிலையம், தனியார் வங்கிகள், மற்றும் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.
இது மட்டுமல்லாத பெரியபாளையத்தில் ஆரணி ஆற்றங்கரை அருகே சுயம்புவாக எழுந்தருளிய புகழ்பெற்ற பவானி அம்மன் திருக்கோவிலூர் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆடி திருவிழா தொடங்கி 14 வார காலம் வெகு விமர்சையாக தற்போது நடைபெற்று வருகிறது.
இக்கோயிலுக்கு வாரம் தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.இந்த நிலையில் ஆரணி ஆற்றில் சென்னை-திருப்பதி சாலையை இணைக்கும் வகையில் ஆரணி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தின் மீது கடந்துதான் ஆந்திராவிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து ஆந்திராவிற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.
மேலும் பக்தர்கள் பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு செல்லவும், அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாணவர்கள் பள்ளிக்கு செல்ல இந்த மேம்பாலத்தின் கடந்து தான் செல்ல வேண்டி உள்ளது. ஆனால் தற்போது பெரியபாளையத்தில் செயல்பட்டு வரும் உணவகங்களும், மேம்பாலத்தில் அருகே உள்ள ஊராட்சிக்கு நிர்வாகத்திற்கு சொந்தமான கோழி,மீன் மார்க்கெட்டில் இருந்து வெளியேறும் குப்பை கழிவுகளும், மீன் மற்றும் இறைச்சி கழிவுகளை அப்பகுதி மக்கள் மற்றும் கடை வியாபாரிகள் கொண்டு வந்து மேம்பாலத்தின் கீழ் கொட்டி செல்வதால் அதில் உணவுைத் தேடி ஆடு, மாடுகள், மற்றும் நாய்கள் கிளறுவதால் துர்நாற்றம் வீசுகிறது.
இதனால் அவ்வழியாக செல்லும் பக்தர்கள், மற்றும் பொதுமக்கள் பள்ளி மாணவர்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தலையிட்டு இந்த குப்பை கழிவுகளை அகற்றி தூய்மைப்படுத்த வேண்டும் என்றும் ஆரணி ஆற்றில் இது போன்று குப்பை, இறைச்சி கழிவுகளை, கொட்டும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu