உயிரிழந்த மாணவரின் உறவினர்கள் சட்டமன்ற உறுப்பினரை முற்றுகையிட்டு போராட்டம்

உயிரிழந்த மாணவரின் உறவினர்கள் சட்டமன்ற உறுப்பினரை முற்றுகையிட்டு போராட்டம்
X

 பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரை முற்றுகையிட்டு உரிய நடவடிக்கை எடுக்ககோரி உறவினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென எம்எல்ஏ துரை.சந்திரசேகர் உறுதி அளித்ததின் பேரில் கலைந்து சென்றனர்

பெரியபாளையம் அடுத்த ஆரணி அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வன் உயிரிழந்த விவகாரம் ஆறுதல் கூற வந்த பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரை முற்றுகையிட்டு உரிய நடவடிக்கை எடுக்ககோரி உறவினர்கள் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த ஆரணி சுப்பிரமணியம் நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் தனியார் ஊழியரான பாஸ்கர் என்பவரது மகன் தமிழ்செல்வன். ஆரணியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 30ம் தேதி வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற நிலையில் பள்ளியில் இரு மாணவர்களுக்கிடையே பேனா வாங்குவதில் சண்டை ஏற்பட்டுள்ளது. அதில் காயமடைந்த மாணவன் தமிழ்ச்செல்வனை ஆம்புலன்ஸ் மூலம் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பொன்னேரி அரசு மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் மாணவன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று ஆரணி பகுதியில் அமைந்துள்ள உயிரிழந்த மாணவன் தமிழ்ச்செல்வன் வீட்டிற்கு ஆறுதல் கூற வந்த பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர துரை.சந்திரசேகரை முற்றுகையிட்டு உயிரிழப்பிற்கு காரணமான மாணவன் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க கோரியும், உறவினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் உறுதி அளித்ததின் பேரில் அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர்.


Tags

Next Story