தனி நபர் ஆக்கிரமித்து கட்டிய கழிவறையை அகற்றக்கோரி பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு

தனி நபர் ஆக்கிரமித்து கட்டிய கழிவறையை    அகற்றக்கோரி   பொதுமக்கள் ஆட்சியரிடம்  மனு
X

கிராம மக்கள் மற்றும் இந்து மக்கள் கட்சி நிர்வாகி வேலு என்பவருடன் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

புல்லரம்பாக்கம் கிராமத்தில் ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் தனியார் ஆக்கிரமித்து கட்டிய கழிப்பறையை அகற்ற வலியுறுத்தினர்

திருவள்ளூர் அருகே உள்ள புல்லரம்பாக்கம் கிராமத்தில் ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் தனி நபர்கள் ஆக்கிரமித்து கழிவறை கட்டியதை அகற்ற வேண்டும் என கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளனர்

திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி தொகுதி ஈக்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட புல்லரம்பாக்கம் கிராமத்தில் ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபையில் தீர்மானம் ஏற்றி அங்கு விநாயகர் கோவில் கட்டுவதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்ய இருந்த நிலையில் அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்த தனி நபர் அங்கு கழிவறையை கட்டியுள்ளார் அதை எதிர்த்து புல்லரம்பாக்கம்கிராம மக்கள் மற்றும் இந்து மக்கள் கட்சி நிர்வாகி வேலு என்பவருடன் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பூண்டி அணைக்கு அருகே உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான மலை குன்று பகுதியை கிறிஸ்தவர்களால் ஆக்கிரமித்து ஆலயம் கட்டப்பட்டுள்ளதாகவும், அந்த இடத்தை அரசு மீட்க வேண்டும் என்றும் கூறினார்.மனுவினை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் ஆல் பி ஜான் வர்கீஸ். இந்த மீது விரைவில் கிராமங்களில் உரிய முறையில் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகள் இருந்தால் அகற்ற நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார




Tags

Next Story
ai solutions for small business