மருத்துவமனையில் செவிலியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

மருத்துவமனையில் செவிலியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
X

தமிழ்நாடு அனைத்து செவிலியர்கள் சங்கம் சார்பில் மருத்துவ கல்லூரி அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

திருவள்ளூர் அரசு மருத்துவமனை தமிழ்நாடு அனைத்து பெண் சுகாதார செவிலியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

ஆரம்ப சுகாதார பெண் ஊழியர்களை தரக்குறைவாகவும், இழிவாகவும் பேசிய வட்டார மருத்துவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு அனைத்து செவிலியர்கள் சங்கம் சார்பில் மருத்துவ கல்லூரி அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி அருகே தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திருத்தணி அடுத்த ஆர்.கே. பேட்டையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலராக பணிபுரியும் தமிழ்ச்செல்வன் என்பவர் அரசு விதிமுறைகளை மீறி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் அரசு பெண் ஊழியர்களை தரக்குறைவாகவும், இழிவாகவும் பேசியதோடு ஒருமையில் பேசிவருவதாக கூறப்படுகிறது.

இதனால் ஆர்.கே‌பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாகவும். இது சம்மந்தமாக ஆர்.கே.பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவர் தமிழ்ச்செல்வன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கக்கோரி திருவள்ளூர் சுகாதார பணிகள் துணை இயக்குனரிடம் இது சம்பந்தமாக புகார் மனு அளித்தும் இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்தும் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் தனலட்சுமி தலைமையில்கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் மருத்துவர் தமிழ்ச்செல்வன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் செவிலியர்களின் இந்த போராட்டம் மாநில அளவிலான போராட்டமாக மாறும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதில் மாவட்ட செயலாளர் கற்பகம் பொருளாளர் சுதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.





Tags

Next Story
ai solutions for small business