புழல் சிறையில் செல்போன் பதுக்கிய விவகாரம்: சிறைக்காவலர் மீது கைதி தாக்குதல்
பைல் படம்
புழல் சிறையில் செல்போன் பதுக்கிய நைஜீரிய கைதியை வேறு அறைக்கு மாற்றியதை கண்டித்து தகராறில் ஈடுபட்ட சக கைதி, சிறை தலைமை காவலர் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி சென்னை புழல் தண்டனை சிறையில் போதை பொருள் கடத்தல் வழக்கில் அடைக்கப்பட்டுள்ள நைஜீரிய கைதி Ayoouluwa David Adebakinயிடம் இருந்து செல்போன், சிம்கார்டு, ஏர் பட்ஸ் ஆகியவற்றை சிறை காவலர்கள் அண்மையில் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து சிறைக்குள் தடை செய்யப்பட்ட செல்போன் பதுக்கி வைத்திருந்த நைஜீரிய கைதியை சிறை அதிகாரிகள் தனியறைக்கு மாற்றம் செய்தனர்.
இதனைக் கண்டித்து சக நைஜீரிய கைதியான Olugu Olisaemekka Emmanual சிறை கண்காணிப்பாளரை சந்திக்க வேண்டும் என சிறை அலுவலரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். சிறை கண்காணிப்பாளர் தற்போது சிறையில் இல்லை எனவும், தலைமை அலுவலகத்திற்கு சென்றுள்ளதாகவும், அவர் மீண்டும் சிறைக்கு வந்ததும் அவரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக சிறை அலுவலர் தெரிவித்த போதும் அதனை நைஜீரிய கைதி ஏற்காமல் தாக்க முற்பட்டுள்ளார்.
அப்போது அங்கு வந்த தலைமை காவலர் செல்வன் நைஜீரிய கைதியை தடுக்க முயன்ற போது காவலரின் சட்டையை பிடித்து இழுத்து கிழித்தும், தரக்குறைவாக பேசியும் ரத்தம் வரும் வகையில் நைஜீரிய கைதி தாக்குதல் நடத்தியுள்ளார். இதனையடுத்து சிறை காவலர் சிறை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றார். இதுகுறித்து சிறை அதிகாரிகள் புழல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu