/* */

அங்கன்வாடி மைய ஆசிரியருக்கு மாவட்ட ஆட்சியர் ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு

அங்கன்வாடி மைய ஆசிரியருக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

அங்கன்வாடி மைய ஆசிரியருக்கு மாவட்ட ஆட்சியர் ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு
X

 திருவலாங்காடு சின்னம்மா பேட்டையில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஆசிரியர் ரேகா தேவி.

திருவள்ளூர் மாவட்டத்தில் 1760 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றது. இந்த மையங்களில் தனியார் பள்ளிக்கு நிகராக அங்கன்வாடி மையங்களை மேம்படுத்த ஸ்மைல் என்ற புதிய திட்டத்தை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி உள்ளார். மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சத்துணவு மற்றும் முன்பள்ளிக் கல்வியில் ஆதரவளிக்கும் திட்டமாக செயல்படுகின்றது.

இந்த அங்கன்வாடி மையம் தனியார் நர்சரி பள்ளிகளுக்கு இணையாக மாவட்டத்தில் 925 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருவள்ளுவர் அடுத்த திருவலாங்காடு சின்னம்மா பேட்டையில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஆசிரியராக ரேகா தேவி பணியாற்றி வருகிறார். இவர் சின்னம்மா பேட்டை அங்கன்வாடி மையத்தில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு தனியார் பள்ளிக்கு நிகராக மாணவர் மாணவிகளை பயிற்று விக்கும் விதத்தை மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்.

இந்த மையங்களில் குழந்தைகளுக்கான செயல்வழி கற்றல் திறனை அதிகரிக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் பொம்மைகள், பழங்கள், காய்கறிகள், விலங்குகளின் உருவப்படங்கள் சுவர்களில் வரையப்பட்டுள்ளன. தமிழ், ஆங்கில எழுத்துக்களுடன் கூடிய பொருட்கள் உள்ளன.

மேலும் விலங்குகள், பறவைகளின் உருவங்களை சரியாக பொருத்தும் வகையில் குழந்தைகளின் திறனை மேம்படுத்தும் பொருட்களும் இடம் பெற்றுள்ளன. கட்டிடத்தின் சுவர்களில் கார்ட்டூன் தலைவர்கள் பொம்மைகளின் வரைபடம் வரைபடத்துடன், குழந்தைகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வரைபடமும் வரையப்பட்டுள்ளது.

அப்பள்ளியில் அங்கன்வாடிக்கு வரும் குழந்தைகளை ஆசிரியர்கள் வரவேற்கும் விதத்தை வீடியோ ஒளிப்பதிவு செய்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல் பி ஜான் வர்கீஸ் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி பாராட்டுக்களை பெற்று வருகிறது.

Updated On: 20 Sep 2022 1:15 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!