கொத்தடிமைகளை மீட்டு செங்கல் சூளைக்கே முதலாளியாக மாற்றிய ஆட்சியர்

கொத்தடிமைகளை மீட்டு செங்கல் சூளைக்கே முதலாளியாக மாற்றிய ஆட்சியர்
X

வீரகநல்லூர் கிராமம் பகத்சிங் நகரில் செங்கல் சூளை அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொத்தடிமைகளாக இருப்பவர்களை மீட்டு அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

கொத்தடிமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் 2 வது கட்டமாக கொத்தடிமைத் தனத்திலிருந்து மீட்டெடுக்கப்பட்டவர்களை செங்கல் சூளை முதலாளி ஆக்கி அவர்களின் வாழ்வில் ஒளிவிளக்கை ஏற்றி வைத்துள்ளார்.

தமிழகத்தில் கொத்தடிமைகளாக இருப்பவர்களை மீட்டு அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்படுபவர்கள் அடுத்ததாக என்ன செய்வது என்று தெரியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதனால் பல குடும்பங்கள் மீண்டும் செங்கல் சூளைகளுக்கே கொத்தடிமைகளாக செல்லக்கூடிய நிலை உருவானது.

இதனால் தமிழக அரசின் சீரிய முயற்சியால் தமிழகத்திலேயே‌ முதல்முறையாக‌ திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த வீரகநல்லூர் கிராமத்தில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட இருளர் இனத்தைச் சேர்ந்த 30 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்க தமிழக அரசின் உத்தரவின்பேரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 5 லட்சத்து 80 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து வீரகநல்லூர் கிராமம் பகத்சிங் நகரில் செங்கல் சூளை அமைக்கப்பட்டுள்ளது.

அதில் 30 குடும்பங்களை சேர்ந்த 300 பேரைக் கொண்டு சூளைப் பணிகளை மேற்கொண்டு, அதில் வரும் வருமானத்தை கொண்டு தங்களது வாழ்வாதாரத்தை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதே போல மாவட்டத்தில் இரண்டாவது கட்டமாக கடம்பத்தூர் அடுத்த பிஞ்சிவாக்கம் கிராமத்தில் கொத்தடிமை தணத்திலிருந்து மீட்கப்பட்ட 40 தொழிலாளர்களுக்கு 4.05 லட்சம் நிதியில் 1 ஏக்கர் அரசு நிலத்தில் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் செங்கல் சூளை முதலாளியாக ஆக்குவதற்கான திட்டத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பிஞ்சுவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் உமா மணிகண்டன் அவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் குடியரசு தலைவர் அவர்களால் கொடிநாள் நன்கொடை மாநிலத்தில் இரண்டாவது இடமாக திருவள்ளூர் மாவட்டம் திகழ்கிறது என்று பாராட்டுகளைப் பெற்ற மாவட்ட ஆட்சியர் அவர்களை பிஞ்சுவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் உமா மணிகண்டன் வாழ்த்து தெரிவித்தார்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா