நிலத்தை மீட்டு தர கோரி தமுமுக, மனிதநேய மக்கள் கட்சியினர் போராட்டம்
நிலத்தை மீட்டு தரக்கோரி தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் மாவட்ட ஆட்சி நுழைவாயிலில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
திருவள்ளூர்-செங்குன்றம் நெடுஞ்சாலையில் வக்பு வாரியத்துக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள நிலத்தைஆக்கிரமிப்பு செய்யப்பட்ட மீட்டு தரக்கோரி தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளை மாவட்ட ஆட்சி நுழைவாயிலில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் நகரம் ஐவேலி அகரத்தில் அமைந்துள்ள பானு பி தர்காவுக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும் அந்த சர்வே எண் வக்பு வாரியத்துக்கு சொந்தமானதும் அனைத்து ஆவணங்களும் கையில் உள்ள நிலையிலும் கோட்டாட்சியர் ஆக்கிரமிப்பாளர்களுக்கு சாதகமாக செயல்படுவதாகவும் கோட்டாட்சியர் மற்றும் திருவள்ளூர் வட்டாட்சியரை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சினர் மற்றும் படேமக்கான் மசூதியில் இருந்து 50க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக பயணத்த போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்
காவல் துறையினர் அனுமதி பெறாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் காவல் துறையினருக்கும் மனிதநேய கட்சினருக்கும் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது: வக்பு வாரியத்துக்கு சொந்தமான இடம் தொடர்பாக பல்வேறு ஆவணங்களை திருவள்ளூர் கோட்டாட்சியரிடம் சமர்ப்பித்தும் அதை அவர் வாங்கக்கூட மறுக்கிறார் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார். ஆகையால் அவர் மீதும் அவருக்கு உறுதுணையாக இருக்கும் திருவள்ளூர் வட்டாட்சியர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.
இதனை அடுத்து புகார் மனு கொடுத்து விட்டு வந்தவர்களை ஏஎஸ்பி. விவேகானந்த சுக்லா தலைமையில் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். சில அரசியல் கட்சினர் அனுமதி இல்லாமல் பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் வேளையில், இஸ்லாமிய அமைப்பு, கட்சியினரை மட்டும் இதுபோல் காவல்துறையினர் கைது செய்தது மனவேதனை அளிப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் சிவகாசி முஸ்தபா கண்டன உரை ஆற்றினார். மற்றும் நிர்வாகிகள் அஸ்ரப், நூர்முகமது, நெல்லை சேக்தாவுது, அசன்னுல்லா, அமீன், உமர், சுராஸ், ஜாகிர்உசேன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu