தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

Suicide News 	| Stomach Pain
X

பைல் படம்.

Suicide News- திருவள்ளூர் அருகே இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Suicide News-திருவள்ளூர் மாவட்டம் ஏகாட்டூர் காமராஜர்புரத்தில் வசித்து வருபவர் தயாநிதி(22). இவர் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனை அடுத்து, தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த தயாநிதி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தும் குணமடையவில்லை என்று கூறப்படுகிறது. இதில் மன உளைச்சலுக்கு ஆளான தயாநிதி யாரும் இல்லாத நேரம் பார்த்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story