பெரியபாளையம் அருகே நீரில் மூழ்கிய தரைப்பாலம்: போக்குவரத்து துண்டிப்பு
தரை பாலம் மீது செல்ல பொது மக்களுக்கு தடை போலீசார் தடுப்புகளை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி பெரியபாளையம் அருகே ஆரணியாற்றில் வெள்ள பெருக்கு காரணமாக தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கிய நிலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டத்திலும், ஆந்திராவிலும் பரவலாக கனமழை பெய்தது. இதன் காரணமாக ஆரணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆரணியாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கால் ஆரணியின் அருகே புதுப்பாளையம் காரணி கிராமங்களுக்கு செல்லும் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது.
இதே போல ஆரணி அருகே மங்களம் கிராமத்திற்கு செல்ல ஆற்றின் குறுக்கே மக்கள் பயன்படுத்தி வந்த மண் பாதையும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. ஆற்றில் சுமார் 3.அடி உயரத்திற்கு மேலாக தண்ணீர் செல்லும் நிலையில் காவல்துறையினர் இந்த தரைப்பாலத்தின் முன் தடுப்புகளை அமைத்து போக்குவரத்தை தடை செய்தனர்.
போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதால் காரணி,நெல்வாய், புதுப்பாளையம், மங்களம், எருக்குவாய் உள்ளிட்ட 10.கிராமங்களில் உள்ள மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு பெரியபாளையம் வழியாக 10.கிமீ சுற்றி செல்கின்றனர்.பள்ளி மாணவர்கள், அலுவலகம் செல்வோர், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் பாதிப்படைந்துள்ளனர்.
வடகிழக்குப் பருவமழை துவங்கிய நிலையில் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த தரைப்பாலத்திற்கு மாற்றாக உயர்மட்ட மேம்பாலம் கட்டித் தர வேண்டும் என மேற்கொண்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாகவே போராடி வந்தனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு 20.கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பாளையம் - காரணி இடையே உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகளுக்கு கடந்த மார்ச் மாதம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் அடிக்கல் நாட்டினார் தற்போது பணிகள் மந்தகதியில் நடைபெற்று வரும் மேம்பாலம் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு விரைவாக கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பள்ளி மாணவர்கள் என பல்வேறு தரப்பு மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu