நீரோட்ட வழிப்படுத்து சுவர் அடிக்கல் நாட்டுவிழா : எம்.பி. ஜெயக்குமார் பங்கேற்பு

நீரோட்ட வழிப்படுத்து சுவர் அடிக்கல் நாட்டுவிழா  :  எம்.பி. ஜெயக்குமார்  பங்கேற்பு
X

முகத்துவார நீரோட்ட  அடிக்கல் நாட்டுவிழாவில் பங்கேற்ற எம்பி ஜெயக்குமார் மற்றும் எம்எல்ஏ துரை சந்திரசேகர்  ஆகியோர்  

பழவேற்காடு, லைட் ஹவுஸ் முகத்துவாரம் மணல் திட்டுகளால் அடைபடாமல் இருக்க நிரோட்ட சுவர் கட்டுமான அடிக்கல் நாட்டுவிழா நடந்தது.

பழவேற்காடு நிரந்தர முகத்துவாரம் அமைக்க லைட் ஹவுஸ் பகுதியில் இருந்து முகத்துவாரம் வரையிலான 4.5 கி.மீ. நீரோட்ட வழிப்படுத்து சுவர் அடிக்கல் நாட்டு விழாவில் திருவள்ளூர் எம்பி ஜெயகுமார், பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மீனவ மக்களின் வாழ்வாதாரமாக பழவேற்காடு எரியும், வங்காள விரிகுடா கடலும் இணையும் முகத்துவாரம் விளங்கி வருகிறது. முகத்துவாரம் அடைபட்டு மணல் திட்டுக்களாக மாறும் காலங்களில் எளிதில் படகுகளில் கடலுக்குள் செல்ல முடியாமலும், மீன்வளம், இறால் உள்ளிட்டவை கிடைக்காமல் மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.

அவ்வப்போது அடைபடும் முகத்துவாரத்தை சொந்த செலவில் தற்காலிகமாக மீன்வர்களே தூர்வாரி வரும் நிலையில் நிரந்தர முகத்துவாரம் ஏற்படுத்தி தர வேண்டும் என மீனவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து 27கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிரந்திர முகத்துவாரம் அமைக்க தமிழக அரசு திட்டம் தயாரித்து பல்வேறு துறைகளின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.

இந்நிலையில் ஒன்றிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஒப்புதல் வழங்கிய நிலையில் இன்று பழவேற்காட்டில் நிரந்தர முகத்துவாரம் அமைக்க லைட் ஹவுஸ் பகுதியில் இருந்து முகத்துவாரம் வரையிலான 4.5 கி.மீ. நீரோட்ட வழிப்படுத்து சுவர் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

திருவள்ளூர் எம்பி ஜெயகுமார், பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர். ஏறக்குறைய 3மாதங்களில் பணிகள் முடிக்கப்பட்டு படகுகள் எளிதாக சென்று, வந்து மீனவர்கள் பயனடையும் வகையில் திட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக எம்பி தெரிவித்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!