போலீஸார் மீது கல் வீசியதால் பரபரப்பு

போலீஸார்  மீது  கல் வீசியதால் பரபரப்பு
X

சம்பவம் நடந்த பகுதிக்கு வந்து இருதரப்பு மக்களிடம் சமாதானப் பேச்சு நடத்தும். திருவள்ளூர் மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் மீனாட்சி

லட்சுவாக்கம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் மீது மர்ம நபர்கள் கல் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டந், ஊத்துக்கோட்டை அருகே உள்ள லட்சிவாக்கம் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்த லட்சிவாக்கம் பகுதியில் உள்ள 43.ஆதிதிராவிட மக்களுக்கு அரசு இலவச வீட்டு மனை பட்டா கொடுத்திருந்தது. இந்நிலையில் அப்பகுதி மக்கள் அப்பகுதியில் கொட்டகை அமைத்து குடியேறி வருகின்றனர். இவர்களுக்கு அந்த இடத்தில் அரசு இடம் கொடுத்ததற்கு பெரம்பூர் பகுதி சேர்ந்த மற்று சமூக மக்கள் தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,.அப்பகுதியில் அசம்பாவதத்தை தவிர்க்கும் வகையில் நான்கு மாதங்களுக்கு மேலாக பாதுகாப்பு பணியில் இரவு பகலாக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும்,ஆதிதிராவிட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் இருக்கும் ஆழ்துளை கிணறு மூலமாக பெரம்பூர் பகுதியில் வசிக்கும் மாற்று சமூகத்தினருக்கு செல்லும் குடிநீர் பைப் லைன் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளதைக் கண்டித்து பெரம்பூர் மாற்று சமூகத்தினர் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் கூடியதால் பதற்றம் ஏற்பட்டது.

அங்கு நிலைமையைக்கட்டுப்படுத்த போலீசார் முயன்று கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் ஆதி திராவிட மக்கள் கொட்டகை மீதும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் மீதும் கல் வீசியதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

இருதரப்புக்கும் மோதல் உருவாகும் சூழல் இருப்பதால் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.சம்பவம் நடந்த பகுதிக்கு வந்த திருவள்ளூர் மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் மீனாட்சி இருதரப்பு மக்களிடம் சமாதானப் பேச்சு நடத்தி வருகிறார்.




Tags

Next Story
ai in future agriculture