ஆடி மாதம் பிறந்ததை ஒட்டி பவானி அம்மன் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்
பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் கூடிய பக்தர்கள் கூட்டம். (உள் படம் : பவானி அம்மன் )
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், ஆரணி ஆற்றங்கரை அருகே அமைந்துள்ளது, புகழ்பெற்ற பவானி அம்மன் திருக்கோவில். இக்கோவிலில் ஆடி மாதம் தொடங்கி ஆடி திருவிழா தொடர்ந்து 14 வார காலம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
இக்கோவிலுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் தமிழக மட்டுமல்லாமல் புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆடி மாதத்தில் வாரம் தோறும் பல்லாயிரம் கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள். குறிப்பாக ஆடி மாதத்தில் வெளியூரிலிருந்து பக்தர்கள் தாங்கள் சொந்த வாகனங்களிலும் பேருந்துகளிலும் பெரியபாளையம் வந்து வாடகைக்கு விடுதி எடுத்து தங்கி இருந்து ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என பலரும் மொட்டை அடித்து ஆலய வளாகத்தில் உள்ள பொங்கல் மண்டபத்தில் பொங்கல் வைத்து உடல் முழுவதும் வேப்பிலை ஆடைகளை அணிந்து, தேங்காய் கையில் ஏந்தி கோவில் சுற்றி வலம் வந்து நெய் தீபம் ஏற்றி வைத்து நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து செல்வார்கள்.
நேற்று ஆடி மாதம் முதல் நாள் என்பதால் அதிகாலை பவானி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், ஜவ்வாது, தேன், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் மூலம சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு வண்ண மலர்களாலும் அலங்காரம் செய்து தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. ஆடி முதல் நாளை முன்னிட்டு சென்னை மட்டுமல்லாது புறநகர் பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் அதிகாலை பூஜைகளில் கலந்துகொண்டனர். சிலர் பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்து தரிசனம் செய்வதும் வழக்கம். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஆலய நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu