வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்..!
கூட்டத்தில் பேசும் அமைச்சர் நாசர், அருகில் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர்
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் பாதிப்படையக்கூடிய 133 இடங்கள் கண்டறியப்பட்டு அத்தகைய இடங்களில் அனைத்து துறையினரும் தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக அமைச்சர் சா.மு. நாசர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சாமு நாசர்.
கடந்த காலங்களில் மழையால் பாதிப்பு அடைந்த பகுதிகளில் கண்டறியப்பட்டு அப்பகுதியில் மீட்பு குழுவினர் முன்னெச்சரிக்கையாக தங்க வைக்க உத்தரவிட்டுள்ளதாகவும் மழையால் ஏற்படும் இயற்கை பேரிடரை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மாவட்டத்தை பொருத்தவரை 133 இடங்கள் பாதிப்படைய கூடிய இடங்களாக கண்டறியப்பட்டு இருப்பதால் அத்தகைய இடங்களை கண்காணிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார். மழைக்காலங்களில் நியாய விலைக் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் போதிய இருப்பு வைக்க உத்தரவிட்டிருப்பதாகவும்
கடந்த காலங்களில் மழையால் அதிக பாதிப்படைந்த பூந்தமல்லி நசரத்பேட்டை பகுதிகளில் தண்ணீர் நிற்காத வகையில் 90% பணிகள் முடிவடைந்துள்ளதாகவும், பணிகள் முடியாத பகுதியில் தண்ணீர் நிற்காத வகையில் மின் மோட்டார்கள் தயார் நிலையில் வைக்க உத்தரவிட்டுள்ளதாக அவர் கூறினார்.
ஆரணி ஆறு வழித்தடங்கள் உள்ள தடுப்பணைகள் சேதமடைந்து உள்ளதை மிக விரைவில் சரி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.திருநின்றவூர் ஈஷா ஏரி நீர் குடியிருப்பு பகுதியில் புகுவதை தடுக்க மதுகுகள் சீரமைப்பு செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திரன், விஜி ராஜேந்திரன், துரை சந்திரசேகர் மற்றும் பேரிடர் மேலாண்மை வருவாய் , தீயணைப்புத் , மருத்துவம் ,ஊரக வளர்ச்சி, கால்நடை என பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu