சீதா-ராமர் திருக்கல்யாணம்..!
சீதா ராமர் திருக்கல்யாணம்
செங்குன்றம் சோத்துபாக்கம் கிராமம் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஸ்ரீசீதா-ஸ்ரீராமர் திருக்கல்யாண வைபவம் நடந்தது.
செங்குன்றம் அடுத்த சோத்துபாக்கம் கிராமம் ஸ்ரீ ஜெயதுர்கா நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஸ்ரீசீதா-ஸ்ரீராமர் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இந்த நிகழ்ச்சி ஆலய நிர்வாகிகள் சுரேஷ், ரஜினி, பிரபு, லதாபிரபு, சரவணன், பாலாஜி, பாபு ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் புன்யாகவாசனம்,சங்கல்பம், கலச ஆவாஹனம்,விஷ்ணு சகாஸ்ரநாம பாராயணம், ஸ்ரீபஞ்ச சுக்த ஹோமம், மற்றும் மூலவர் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கும், ஸ்ரீசீதாதேவி ,ஸ்ரீராமர் உற்சவருக்கும் பால், தயிர், சந்தனம், இளநீர், ஜவ்வாது, தேன், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மற்றும் 108 இளநீர் அபிஷேகம் செய்து வண்ண, வண்ண மலர்களாலும், திரு ஆவணங்களாலும் அலங்காரம் செய்து மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.
இதணைத்தொடர்ந்து மேளதாள வாத்தியத்துடன் மூலமந்திரங்கள் முழங்க ஊர் பொதுமக்கள் முன்னிலையில் ஸ்ரீசீதா-ஸ்ரீராமர் திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சி வெகு விமர்ச்சியாக நடைபெற்றது. பின்னர் ஸ்ரீசீதா-ஸ்ரீராமர் புகழை போற்றும் ஆன்மீக இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது..இவ்விழாவிற்கு சுற்றுவட்டார பக்தர்கள், கிராம பொதுமக்கள் கலந்துகொண்டு அர்ச்சனைகள் செய்து சுவாமி தரிசனம் செய்தனர்.முடிவில் ஆலயம் சார்பில் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu