சிறுவாபுரி கோவில் குளம் சீரமைக்க அடிக்கல் : காணொளி வாயிலாக முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

சிறுவாபுரி கோவில் குளம் சீரமைக்க அடிக்கல் : காணொளி வாயிலாக முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
X

திருக்குளம் அமைக்க பூமி பூஜை 

சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவில் குளத்தை சீரமைக்க அடிக்கல் நடும் விழாவை காணொளி காட்சி வாயிலாக முதல்வர் தொடங்கி வைத்தார்.

பிரசித்தி பெற்ற சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் திருக்குளம் 3.14கோடி மதிப்பீட்டில் சீரமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா. காணொளி காட்சி மூலம் முதல்வர் அடிக்கல் நாட்டினார். 2.30லட்சம் மதிப்பில் ஆன்மீக நூலகம் திறப்பு.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த சின்னம்பேடு சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.


6.வாரங்கள் சிறுவாபுரி கோவிலுக்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. புதிய வீடு கட்ட வேண்டும், திருமண தடை நீங்க வேண்டும், அரசியல், ரியல் எஸ்டேட் தொழில் என பல்வேறு வேண்டுதல் நிறைவேறுவதற்காக பக்தர்கள் ஆலயத்தின் பின்புறம் உள்ள வேப்பமரத்தடியில் நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்வதும், செங்கற்களை அடுக்கி வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்துவது வாடிக்கையாக உள்ளது.

சிறுவாபுரி முருகன் கோவில் புணரமைக்கப்பட்டு 19ஆண்டுகளுக்கு பிறகு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி அன்று மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜையும் நடைபெற்றது. இதன் பின்னர் இக்கோவிலுக்கு செவ்வாய் நாட்களில் மட்டுமல்லாமல் வாரத்தில் 7.நாட்களும் பக்தர்கள் வரத் தொடங்கி விட்டனர்.

புறநகர் பகுதியில் மட்டுமல்லாமல் தமிழகத்திலிருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டு செய்து செல்கின்றனர். இந்நிலையில் சிறுவாபுரி கோவிலின் திருக்குளம் 3.14கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கும் திருப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்.


திருக்குளம் சீரமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் அடிக்கல் நாட்டி வைத்து பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் சிறுவாபுரி கோவிலில் 2.30 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஆன்மீக புத்தக நூலகத்தினையும் திறந்து வைத்தார்.

இதில் பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராசன், இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் ரமணி, ஒன்றிய செயலாளர் செல்வசேகரன், ஆலய செயல் அலுவலர் செந்தில்குமார், ஆலய தலைமை குருக்கள் ஆனந்தன், ஒன்றிய கவுன்சிலர் சந்திரசேகர், ஊராட்சி மன்ற தலைவர் ஜான்சி ராணி ராஜா. உள்ளிட்டோர் பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!