4 டன் ரேஷன் அரிசி மினிவேனுடன் பறிமுதல் -4 பேர் கைது

4 டன் ரேஷன் அரிசி மினிவேனுடன் பறிமுதல் -4 பேர் கைது
X

திருவள்ளூர் அடுத்த ராமஞ்சேரியிலிருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசி மினிவேனுடன் பறிமுதல்; 4 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை.

திருவள்ளூர் அடுத்த ராமஞ்சேரி பகுதியில் இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் உத்தரவின்பேரில் கனகம்மாசத்திரம் காவல் ஆய்வாளர் டில்லி பாபு தலைமையிலான காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ராமஞ்சேரி பகுதியில் இருந்து ஆந்திரா நோக்கி சென்ற மினிவேனை மடக்கி சோதனை செய்தபோது, அதில் தமிழக அரசால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் விலையில்லா ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து அவர்களை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் ஆந்திரா மாநிலம் சித்தூரை சேர்ந்த பொன்னுரங்கம் மற்றும் தமிழகத்தை சேர்ந்த சதீஷ், நேதாஜி, மணி ஆகிய 4 பேர், தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டது உறுதியானது. இதனையடுத்து அரிசி கடத்தலில் ஈடுபட்ட 4 பேரையும் கனகம்மாசத்திரம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!