மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவி மரணம்

மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவி மரணம்
X

மர்ம காய்ச்சலுக்கு பலியான பள்ளி மாணவி சரண்யா

சோழவரம் அருகே மர்ம காட்சிகளுக்கு 11 ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

.சோழவரம் அருகே மர்ம காய்ச்சலுக்கு 11ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி, சோழவரம் அடுத்த அலமாதி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் முடி திருத்தும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் மகள் சரண்யா ( 16 ) அலமாதி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக காய்ச்சல் மற்றும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

காய்ச்சல் அதிகரித்ததால் நேற்று சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மர்ம காய்ச்சலுக்கு சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்த பகுதி மக்கள் கூறியதாவது: தற்போது பெய்து வரும் மழையின் காரணத்தினால் தாங்கள் பகுதியில் உள்ள பல பகுதிகளில் தண்ணீர் செல்ல வழி இல்லாததால் குட்டைகளில் தேங்கி நின்கின்றன. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி மக்களை கடித்து வருவதால் மர்ம காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது.

எனவே மழைக்காலங்களில் சுகாதாரத் துறையினர் போர்க்கால அடிப்படையில் நாள்தோறும் தாங்கள் பகுதியில் அனைத்து தெருக்களிலும் ப்ளீச்சிங் பவுடர் தெளித்து. மற்றும் மழைநீர் செல்ல ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மருத்துவத் குழுவினர் முகாமிட்டு தாங்கள் பகுதியில் மருத்துவ பரிசோதனை அனைவருக்கும் மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தனர்.


Tags

Next Story
ai based agriculture in india