/* */

சவுடு மண் பெயரில் மணல் கொள்ளை..! ஒற்றை ஆளாய் கூக்குரல்..!

கீழ் மாளிகை பட்டு கிராம பகுதியில் ஆரணி ஆற்றின் கரையை உடைத்து மணல் கடத்தல் செய்யபப்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயி கோரிக்கை விடுத்தார்.

HIGHLIGHTS

சவுடு மண் பெயரில் மணல் கொள்ளை..! ஒற்றை ஆளாய் கூக்குரல்..!
X

சவுடு மண் எடுக்கும் பகுதி.

பெரியபாளையம் அருகே கீழ் மாளிகை பட்டு பகுதியில் ஆரணி ஆற்றின் கரையை உடைத்து சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், வடமதுரை ஊராட்சிக்குட்பட்ட கீழ் மாளிகை பட்டு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பாபு இவருக்கு கீழ் மாளிகை பட்டு பகுதியில் ஆரணி ஆற்றின் அருகே சுமார் 4.5 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தில் வேர்க்கடலை,நெற்பயிர் விவசாயம் செய்து வருகிறார்.இதனிடையே இவரது நிலத்திற்கு அருகாமையில் தனிநபர் ஒருவருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் சவுடுமண் குவாரி ஒன்று அரசு அனுமதியோடு இயங்கி வருகிறது.


இந்த நிலையில் விவசாயி பாபு என்பவருக்கு சொந்தமான நிலத்தில் சட்டவிரோதமாக தனியார் குவாரி நிர்வாகம் பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் கொள்ளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தனியார் குவாரி உரிமையாளரிடம் கேட்டபோது உரிய பதிலளிக்காமல் தகாத வார்த்தைகளால் பேசியதோடு அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இது சம்பந்தமாக விவசாயி பாபு அரசு அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விவசாயி பாபு புகார் அளித்துள்ளார்.இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட விவசாயி தெரிவிக்கையில் இப்பகுதியில் தனி நபர் ஒருவருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் சவுடு மண் குவாரி ஒன்று இயங்கி வருகிறது,

3 அடி அளவு மட்டுமே சவுடு மண் எடுக்க வேண்டும் என்று அரசு ஆணை உள்ள நிலையில். இதனை சற்றும் பொருட்படுத்தாமல் 10 அடிக்கும் மேலாக மண் எடுப்பதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதோடு இதனை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் செய்து வரும் விவசாயிகளின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. இது மட்டுமல்லாமல் விவசாய நிலத்திற்கு பயன்படுத்தும் மோட்டார்களை சேதப்படுத்தி தண்ணீர் கொண்டுவரும் பிளாஸ்டிக் பைப்புகளை சேதப்படுத்தினர்.

இது மட்டுமல்லாமல் அதிகாலை 5 மணி முதல் சுமார் 50க்கும் மேற்பட்ட லாரிகளில் மணல் கொள்ளை நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.மேலும் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் முன்னிட்டு அரசு துறை அதிகாரிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருவதால் இதனை பயன்படுத்திக் கொண்டு ஆரணி ஆற்றின் கரை உடைத்து இரவு நேரங்களில் சட்டவிரோதமாக லாரிகள் மூலம் ஆற்றில் மணல் கடத்தல் நடைபெற்று வருவதாக தெரிவித்த அவர் இதுபோன்று சவுண்டு மண் குவாரி பெயரில் மணல் கொள்ளையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு,தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் அனுமதியின்றி மண் அள்ளிய விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்

நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் விவசாயி தெரிவித்தார்.

Updated On: 22 March 2024 2:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...