உளுந்தை ஊராட்சி கிராம சபைக் கூட்டம்: வட்டாட்சியருக்கு எதிராக தீர்மானம்
உளுந்தை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டம்
திருவள்ளூர் அருகே உளுந்தை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தனியார் தொழிற்சாலை சார்பில் ஆக்கிரமித்த இடத்தை மீட்காமல் அதற்குண்டான பணத்தை ஊராட்சிக்கு பெற்றுத் தருவதாக வட்டாட்சியர் தெரிவித்ததையடுத்து திருவள்ளூர் வட்டாட்சியருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்.
மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட உளுந்தை ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் உளுந்தை ஊராட்சியில் உள்ள தனியார் தொழிற்சாலை அருகில் உள்ள ஊராட்சிக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக ஊராட்சி மன்றத் தலைவர் எம்.கே.ரமேஷ் திருவள்ளூர் வட்டாட்சியரிடம் புகார் அளித்திருந்தார்.
அதனை ஆய்வு செய்த வட்டாட்சியர் மதியழகன் 31 சென்ட் நிலம் மட்டும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு மதில் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. எனவே ஆக்கிரமிப்பு செய்ப்பட்டுள்ள நத்தம் புறம்போக்கு நிலத்திற்கு ஈடாக தொழிற்சாலை பட்டா நிலமோ அல்லது அரசு வழிகாட்டி மதிப்பின் படி அரசுக்கு உரிய தொகையின் செலுத்தி பட்டா பெற்றுக் கொள்ளலாம் என ஊராட்சி மன்றத் தலைவருக்கு வட்டாட்சியர் மதியழகன் பதில் அளித்துள்ளார்.
உளுந்தை கிராமத்தில் வீடின்றி வசிக்கும் ஏழை எளிய மக்கள் தவிப்பவர்களுக்கு நிலத்தை வழங்காமல் தொழிற்சாலை நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்படும் திருவள்ளூர் வட்டாட்சியர் மதியழகனுக்கு எதிராக கிராம சபைக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் நிலத்தை மீட்டு நிலம் இல்லாத வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வார்டு உறுப்பினர்கள் கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu