தாமரைப்பாக்கத்தில் சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீரால் பொதுமக்கள் அவதி

தாமரைப்பாக்கத்தில் சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீரால் பொதுமக்கள் அவதி
X

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், தாமரைப்பாக்கம்-திருநின்றவூர்- செங்குன்றம் ஆகிய நெடுஞ்சாலையில் தேங்கியுள்ள மழைநீர்

சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், தாமரைப்பாக்கம்-திருநின்றவூர்- செங்குன்றம் ஆகிய நெடுஞ்சாலையில் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் சாலையில் சமீபத்தில் பெய்த சிறிய மழையை காரணமாக மழை நீர் தேங்கி நின்றுள்ளது.

இதனால் வாகனங்களும் அவ்வழியே செல்லும் பொதுமக்களும், வியாபாரிகளும்,நடந்து செல்பவர்களும், பொதுமக்களும் பல்வேறு வகையான இன்னலுக்கு ஆளாகின்றனர். எனவே, இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும், ஊராட்சிமன்ற நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பகுதி வாசிகள் தெரிவிக்கையில் வருடா வருடம் பெய்யும் மழையின் காரணத்தினால் மழைநீர் வடிகால் கால்வாய் இல்லாததால் சாலையில் இதுபோன்று மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிப்பதோடு அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சில நேரங்களில் அதில் உள்ள பள்ளங்களில் விழுந்து காயப்படுகின்றனர்.

இது மட்டுமல்லாமல் தீங்கு நிற்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி இரவு நேரங்களில் அப்பகுதி மக்கள் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இந்தக் கொசுக்கள் கடித்தால் பல்வேறு மர்ம காய்ச்சலும் வருவகிறது. இப்பகுதியில் வடிக்கால் கால்வாய் அமைத்து தர வேண்டும் என்று பலமுறை ஊராட்சி நிர்வாகத்திற்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.


Tags

Next Story
ஆள் இல்லாமலே இயங்கும் விமானம்,அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு