மூடப்பட்ட நூலக கட்டிடத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை
மூடப்பட்ட நூலக கட்டிடம் (உள்படம்- அடுக்கி வைக்கப்பட்டுள்ள சிமெண்ட் மூட்டைகள்).
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பளையஞ் சேரி ஊராட்சியில் சுமார் 2000 _க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் படித்த இளைஞர்கள் மற்றும் கிராம மக்கள் அறிவு சார்ந்த புத்தகங்கள் நாளிதழ்களை படிக்க நூலகம் ஒன்று சுமார் ரூ. 4 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் மட்டுமே செயல்பட்டு வந்த நிலையில் தற்போது கட்டிடம் மூடப்பட்டு உள்ளது.
இதில் உள்ளே இருந்த புத்தகங்கள் திருட்டுப் போய் சிமெண்ட் குடோனாக மாறி உள்ளது. இது குறித்து அப்பகுதி படித்த இளைஞர்கள் இந்த நூலக கட்டிடத்தால் அறிவு சார்ந்த தங்களை படித்து பயன் பெற்றதாகவும் தற்போது மூடப்பட்டதால் ஆரணி ,பெரியபாளையம், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நூலகங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனை உடனடியாக சீர் செய்து நிரந்தர நூலகர் ஒருவரை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu