பிச்சாட்டூர் அணையில் இருந்து ஆரணி ஆற்றில் உபரி நீர் திறப்பு

பிச்சாட்டூர் அணையில் இருந்து ஆரணி ஆற்றில் உபரி நீர் திறப்பு
X

பிச்சாட்டூர் அணை

பிச்சாட்டூர் அணையில் தற்போது 277 அடியை எட்டியுள்ள நிலையில் 4 மதகுகளில் இரண்டு மதகுகள் வழியாக ஆரணி ஆற்றுக்கு வினாடிக்கு 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணையின் 281 அடியில் தற்போது 277 அடியை எட்டியுள்ள நிலையில் 4 மதகுகளில் இரண்டு மதகுகள் வழியாக ஆரணி ஆற்றுக்கு வினாடிக்கு 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

மாண்டஸ் புயல் காரணமாகவும் ஆந்திர மாநிலத்தில் தொடர் மழை காரணமாகவும், ஆந்திர மாநிலம் பிச்சட்டூர் அணை வெகுவாக நிரம்பி வருகிறது. இந்த ஏரிக்கு வினாடிக்கு 4000 ஆயிரம் கன அடி நீர்வரத்து வந்து வந்து கொண்டிருக்கிறது. இந்த ஏரியின் முழு கொள்ளளவான 1805 மில்லியன் கண்ணாடியில் தற்போது 1032 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.

இந்த நிலையில் இந்த பிச்சாட்டூர் ஏரியின் 281 அடியில் தற்போது 277 அடி எட்டியுள்ள நிலையில், ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணையில் உள்ள நான்கு மதங்களில் இரண்டு மதகுகள் வழியாக வினாடிக்கு 500 கன அடி நீரானது தற்போது ஆரணி ஆற்றுக்கு திறந்து விடப்பட்டுள்ளது திறக்கப்படும்.

இந்த தண்ணீர் ஆனது சுருட்டுப்பள்ளி வழியாக ஆரணி ஆற்றில் கலந்து ஊத்துக்கோட்டை, தாராச்சி, சிற்றம்பாக்கம், பேரண்டூர், பாலவாக்கம், ஆத்துப்பாக்கம், பெரியபாளையம், மங்கலம், பாலவாக்கம், ஆர்.என் கண்டிகை, கீழ்முதலம்பேடு, கவரப்பேட்டை, பெருவாயல், பெரிய காவளம், பொன்னேரி, லட்சுமிபுரம், கம்மவார் பாளையம், பெரும்பேடு, திருவல்லாயிவாயல் வழியாக பழவேற்காடு கடலில் கலக்கும் எனவும், ஆரணி ஆற்றின் கரையோரத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும் ஆரணி ஆற்றில் பொதுமக்கள் யாரும் இறங்கவோ குளிக்கவோ வேடிக்கை பார்க்கவோ துணி துவைக்கவும் செல்பி எடுக்கவோ செல்ல வேண்டாம் எனவும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பீ ஜான் வர்கீஸ் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது திறக்கப்பட்டுள்ள இந்த தண்ணீரானது பிச்சாட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிக்கப்பட்டால் தீர்த்திறப்பு அதிகரிக்கப்படும் என தமிழக பொதுப்பணி துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்