துரித காசநோய் கண்டறிதல் முகாம்
சுகாதாரத்துறை சார்பில் ஒரக்காடு ஊராட்சியில் நடந்த துரித காசநோய் கண்டறிதல் முகாம்
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் மாவட்ட காசநோய் துணை இயக்குனர் டாக்டர். சங்கீதா ஆகியோரின் அறிவுத்தலின் படி சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட ஒரக்காடு ஊராட்சியில் காசநோய் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இந்த முகாமை ஊராட்சி மன்ற தலைவர் லீலா சுரேஷ் தொடக்கி வைத்தார். இதில் வட்டார மருத்துவ டாக்டர் ஜெயதீபா, டாக்டர் ஆர்த்தி, காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வை யாளர் லோகநாதன், ஹரிபாபு உள்ளிட்ட மருத்துவ குழுவினர் பங்கேற்று பொதுமக்களுக்கு காசநோய் கண்டறியும் பரிசோதனையை நடத்தினர். இந்த முகாமில் ஊராட்சி செயலர் சரளா மற்றும் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு இலவசமாக மார்பு எக்ஸ்ரே, சளி, ரத்த பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொண்டனர்.
காசநோய் குறித்து கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், காசநோய் பரிசோதனைக் காக மக்கள் தொலைதூரம் செல்ல வேண்டியுள்ளதால் பெரும்பாலான மக்கள் போகாமலேயே இருந்து விடுகின்றனர். இதனால் நோயின் தாக்கம் அதிகரித்து மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளா கின்றனர்.
எனவே கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனத்தை கிராமங்களுக்கே கொண்டு வந்து பரிசோதனை நடத்தப்படுவதாகவும் உடனடியாக சோதனை முடிவுகள் மக்களுக்கு தெரிவித்து வருவதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த திட்டத்திற்கு கிராம மக்களிடம் வரவேற்பு இருப்பதாகவும் தெரிவித்தனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu