சந்திரபாபு நாயுடு கைது கண்டித்து நாயுடு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்..!
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அராஜக ஆட்சி நடத்துகிறார் என்று அவரது ஆட்சியைக்கண்டித்தும் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் தச்சூரில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் மதிமுக மாவட்ட செயலாளர் பாபு பேசினார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த தச்சூர் கூட்டுசாலையில் கம்மவார் நாயுடு அமைப்பின் சார்பில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.இதில் பங்கேற்றவர்கள் சந்திரபாபுவுக்கு ஆதரவான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
இதில் பேசிய சத்தியவேடு முன்னாள் தெலுங்கு தேச எம்.எல்.ஏ ஹேமலதா ஜெகன்மோகன் ரெட்டி பதினான்கு மாதங்கள் சிறையிலிருந்தார்.அதற்கு பழிவாங்கவே சந்திரபாபு நாயுடுவை பொய்வழக்கு போட்டு கைது செய்திருப்பதாக குற்றம் சாட்டினார்.இதனை தொடர்ந்து பேசிய திருவள்ளூர் மாவட்ட மதிமுக செயலாளர் நெமிலிச்சேரி பாபு ஆந்திராவில் வீடு நிலம் வாங்க பத்திரப்பதிவு செய்யும்போது அசல் பத்திரத்தை அரசாங்கம் வைத்து கொள்ளுமாம் நாம் பணம் கொடுத்து வாங்கிய நிலத்தின் அசல் பத்திரத்தை அரசாங்கத்திற்கு எதற்கு தரவேண்டும் இது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர் பேசுகையில் ஜெகன்மோகன் ரெட்டி அராஜக ஆட்சி நடத்துவதாக கடுமையாக சாடினார்.சந்திரபாபு நாயுடுவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் அவர் வருங்காலத்தில் தேசிய தலைவராக உருவெடுப்பதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என குறிப்பிட்டார். இந்த கண்டன ஆர்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu