ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து பகுஜன் சமாஜ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து பகுஜன் சமாஜ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!
X

ஆம்ஸ்ட்ராங் திரு உருவ படத்துக்கு மாலி அணிவித்த பகுஜன் சமாஜ் கட்சியினர்.

திருவள்ளூரில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழக அரசுக்கு தொடர்பு இல்லை என்றால் வழக்கை சிபிஐ க்கு மாற்ற வேண்டும் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழக அரசுக்கு தொடர்பு இல்லை என்றால் இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி திருவள்ளூரில் பகுஜன் சமாஜ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ஆம் தேதி பெரம்பூர் பகுதியில் உள்ள அவரது வீட்டின் முன் மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக ஏற்கெனவே கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களுக்கும் கொலைக்கும் சம்பந்தம் இல்லை என்றும் உண்மையான கொலையாளியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று இந்த கொலை வழக்கை சிபிஐ -க்கு மாற்ற வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி அருகே பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட தலைவர் பிரேம் தலையில் 500-க்கும் மேற்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநில செயலாளர் சத்தியமூர்த்தி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்றும் உண்மையான குற்றவாளிகள் யார் என்று கண்டுபிடித்து கொலையின் பின்னணியைக் கண்டறிய வேண்டும்.


தமிழக அரசுக்கு இந்த கொலை வழக்கில் தொடர்பு இல்லை என்றால் இந்த வழக்கை சிபிஐ அல்லது தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்பது பகுஜன் சமாஜ் கட்சியின் கோரிக்கை மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள 75 சதவீத கட்சியினரின் கோரிக்கையாக உள்ளது என்றும் ஏன் தமிழக அரசு இந்த கொலை வழக்கில் மௌனம் காக்கிறது என்று தெரியவில்லை என்றும், கொலை நடந்தது 11- நாட்கள் ஆகிவிட்டது ஆனால் கொலைக்கான பின்னணி என்ன இது கூலிப்படையின் கொலை என்றால் கூலி கொடுத்தது யார் இதற்கு பின்னால் இருந்து செயல் பட்டதும், மூளையாக இருந்து செயல் பட்டதும் யார் இதற்கு பணம் கொடுத்து செயல் படுத்தியது யார் என்று கண்டுபிடிக்க வேண்டும்.

ஆனால் தமிழக அரசும் காவல் துறையினரும் காக்கிற மௌனம் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல் துறையின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவேதான் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட்டு இந்த கொலைக்கான உண்மைகளை மக்கள் முன் வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும் என்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் கோரிக்கையாக வைத்துள்ளோம் என்றும் இந்த கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் தமிழக முழுவதும் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களின் ஈடுபட போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!