இளம்பெண்ணிடம் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது

இளம்பெண்ணிடம் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது
X

கைது செய்யப்பட்ட பன்னீர்

பழவேற்காட்டில் இளம்பெண்ணிடம் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசிடம் ஒப்படைத்தனர்

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு வைரவன் குப்பம் பகுதியைச் சேர்ந்த பன்னீர் (19). இவர் கள்ளுக்கடை மேடு பகுதியில் உள்ள முட்புதரில் 21வயது பழங்குடியின இளம்பெண் இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக சென்றபோது அவரை தாக்கி பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.

அந்த பெண் அலறி கூச்சலிட்டதை தொடர்ந்து, பொது மக்கள் அவரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசிடம் ஒப்படைத்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பழவேற்காடு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரில் அவர் கைது செய்யப்பட்டு திருப்பாலைவனம் காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாலியல் பலாத்காரம் செய்த பழங்குடியின இளம் பெண்ணை தாக்கி கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முட்புதரை திறந்தவெளி கழிப்பிடமாக அங்கு உள்ளவர்கள் பலர் பயன்படுத்தி வருகின்றனர். எனவே தான் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வதாகவும், பொதுக்கழிப்பிடம், தனிநபர் கழிப்பிடங்களை அமைத்து இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் மாவட்ட நிர்வாகம் உரிய விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!