கான்டாக்ட் லென்ஸ் ஸ்மார்ட் கார்டு பயன் படுத்துவோருக்கு போலீஸ் எச்சரிக்கை

கான்டாக்ட் லென்ஸ் ஸ்மார்ட் கார்டு பயன் படுத்துவோருக்கு போலீஸ் எச்சரிக்கை
X

திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி ஆபிஸ் பைல் படம்

கான்டாக்ட் லென்ஸ் ஸ்மார்ட் கார்டு பயன்படுத்துவோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கான்டாக்ட் லென்ஸ் ஸ்மார்ட் கார்டு பயன்படுத்துபவர் எனில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு பரிவர்த்தனையும் எளிமையாக்கும் பொருட்டு பல்வேறு கட்டமாக முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மக்களும் அதற்கு ஏற்றார்போல் அதற்கு ஆதரவு அளிக்கும் பொருட்டு பல்வேறு கட்ட பண பரிவர்த்தனையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கான்டாக்ட் ஸ்மார்ட் கார்டு எனும் பரிவர்த்தனையின் ஸ்கேனர் மூலமாக பண பரிவர்த்தனை செய்வது தற்பொழுது அதிகமாக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

அவ்வாறு நீங்கள் ஸ்மார்ட் கார்டு பயன்படுத்துகிறீர் எனில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கிரெடிட் கார்டு ரீடர் மூலமாக பின் நம்பர் எதுவுமின்றி குறிப்பிட்ட தொலைவில் இருந்து உங்களுடைய பணத்தினை திருடப்படலாம் எனவே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் இவ்வாறு திருவள்ளூர் மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: ஈரோட்டில் 170 பேர் கைது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல்