திருட்டு தொழிலில் இருந்து திருந்தி வாழ, மறுவாழ்வு அளிக்குமாறும் போலீஸ் எஸ்பியிடம் மனு

திருட்டு தொழிலில் இருந்து திருந்தி வாழ, மறுவாழ்வு அளிக்குமாறும் போலீஸ் எஸ்பியிடம் மனு
X
பைல் படம்
திருவள்ளூரை சேர்ந்த வாலிபர் திருட்டு செயல்களில் இருந்து திருந்தி வாழ, மறுவாழ்வு அளிக்குமாறும் போலீஸ் எஸ்பியிடம் மனு அளித்தார்.

திருவள்ளூரை அடுத்த மப்பேடு சமத்துவபுரம் மேட்டுக்கடை மாதா கோவில் தெருவை சேர்ந்த தமிழ் (எ) தமிழரசன் (27) என்ற வாலிபர் .

நேற்று தனது உறவினர்களுடன் திருவள்ளூரில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில்:-

தான் இதற்கு முன் சிறு சிறு திருட்டுகளில் ஈடுபட்டு சிறைக்கு சென்று வந்த நிலையில் தற்போது எந்த தவறும் செய்யாத பட்சத்தில் தன் மீது அனைத்து காவல் நிலையங்களிலும் பொய்யான வழக்கு பதிவு செய்து சிறையில் அடைப்பது வாடிக்கையாக உள்ளது.

தான் தற்போது திருமணம் செய்து கொள்ள இருப்பதால் திருந்தி வாழ்வதற்கு கருணை அடிப்படையில் மன்னிப்பு அளிக்க வேண்டும் எனவும்,

இனிமேல் தன் மீது எந்த ஒரு வழக்கு பதிவு செய்ய வேண்டாம் எனவும், தான் எந்த குற்ற செயல்களிலும் ஈடுபட மாட்டேன் எனவும் திருந்தி வாழ்வதற்கு சந்தர்ப்பம் அளிக்குமாறு தனது உறவினர்களுடன் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனுவை அளித்தார்.

மனுவை பெற்றுக்கொண்ட காவல் கண்காணிப்பாளர் அதன் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!