சிமெண்ட் கலவை தொழிற்சாலையை அகற்றக்கோரி கிராம மக்கள் மனு
குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் தனியார் சிமென்ட் கலவை கான்கிரீட் தொழிற்சாலையால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கிராமமக்கள் மனு அளித்தனர்
திருவேற்காடு நகராட்சி 16- வது வார்டுக்குட்பட்ட பகுதியில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் தனியார் சிமென்ட் கலவை கான்கிரீட் தொழிற்சாலையால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது மக்கள் புகார்.
திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட 16-வது வார்டு வானகரம் பகுதியில் சுமார் இரண்டாயிரத்திற்கும் குடும்பங்களை சேர்ந்த 8000.திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில்,கடந்த 23.ஆண்டுகளுக்கு முன்பு குடியிருப்புகள் குறைவாக இருந்தபோது தனியார் சிமென்ட் கலவை கான்கிரீட் உற்பத்தி தொழிற்சாலை தொடங்கப்பட்டுள்ளது. நாளைக்கு நான் குடியிருப்பு வாசிகள் அதிகமான நிலையில் இந்த தொழிற்சாலை சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் இயங்கி வருவதாக கூறப்படுகிறது.
மேலும் தொழிற்சாலையில் கலக்கப்படும் ரசாயனத்தால் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவால் மழை நீர் கலக்கும்போது பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனால் வீடுகள், பள்ளிகள் மாசுபடுகின்றது. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள், சிறுவர்கள் பெரும்பாலானோர் மூசசுத்திணறல், தும்மல், ஆஸ்துமா, நுரையீரல் பிரச்னை, எளிதில் சளி பிடித்து அவதிக்குள்ளாகினர். மேலும் தோல் சம்பந்தமான பிரச்னை மற்றும் குடல் பிரச்சினை ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அர்பன் ட்ரீ குடியிருப்பு பகுதியில் 300.வீடுகளும், ராஜீவ் நகர், பள்ளிக்குப்பம், சொக்கலிங்கம் நகர், மகாலக்ஷ்மி நகர் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மற்றும் வேதாந்தா பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர் என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவதால் இந்த தொழிற்சாலையை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
இதுகுறித்து ஏற்கெனவே மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu