கோவில் இடத்தில் நெல்களம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மனு

கோவில் இடத்தில் நெல்களம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மனு
X

திருவள்ளூர் அருகே கோவில் இடத்தில் நெல் களம் அமைப்பதற்காக திமுக பிரமுகர் முயற்சிப்பதாக பொதுமக்கள் மாவட்டஆட்சியர்யிடம் புகார்மனு அளித்துள்ளனர்.

காஞ்சிபாடி கிராமத்தில் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் நெல் களம் அமைப்பதற்காக முயற்சி செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை கோரி மனு

திருவள்ளூர் அருகே கோவில் இடத்தில் நெற்களம் அமைப்பதற்காக திமுக பிரமுகர் முயற்சிப்பதாக பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர்யிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருவேலாங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட காஞ்சி பாடி கிராமத்தில் சுமார் ஐந்து தலைமுறையாக பழமை வாய்ந்த கும்மத்தம்மன் கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலில் பாளையக்காரர்கள், மற்றும் ஆதிதிராவிடர் மக்கள் இரு தரப்பினரும் பல ஆண்டு களாக சாமி தரிசனம் செய்து வழிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோவிலுக்கு சொந்தமான இடத்தில் நெல் களம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி சார்ந்த திமுக பிரமுகர்யுவராஜ் என்பவர் முயற்சிப்பதாகவும் அதைக் குறித்து அவரிடம் கேட்கச் சென்ற பொதுமக்களை மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது..

இதுகுறித்து, திருவலாங்காடு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் நேரில் சென்று புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், விவசாயத்திற்கு தடையாக நாங்கள் செயல்படவில்லை என்றும்,நெல் களம் அமைப்பதற்கு எங்கள் பகுதியில் அரசு நிலங்கள் அதிக அளவில் உள்ளது. அந்த இடங்களில் எல்லாம் நெற்களம் அமைக்காமல் கோவில் இடத்தில் அமைக்க முயற்சி செய்து வரும் திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஆல் பி ஜான் வர்கீஸ்யிடம்,புகார் மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அரசுக்கு சொந்தமான இடங்கள் உள்ளதாகவும் அதில் நெல் களம் அமைக்காமல் கோவில் இடத்தில் களம் அமைக்க வேண்டும் என்று திமுக பிரமுகர் முயற்சிப்பதாகவும் அதிகாரிகளும் அதற்கு துணை போகின்றனர். இப்பிரச்னை தொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்ததாக தெரிவித்தனர்.





Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!