பழவேற்காடு ஏரியில் நிரந்தர முக துவாரம் அமைக்க அனுமதி: அமைச்சர் கள ஆய்வு
பழவேற்காடு நிரந்தர முகத்துவாரம் அமைக்க அனுமதி வழங்குவது தொடர்பாக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் படகில் சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்
பழவேற்காடு நிரந்தர முகத்துவாரம் அமைக்க அனுமதி வழங்குவது தொடர்பாக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் படகில் சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டம் , பழவேற்காடு மீனவ மக்களின் வாழ்வாதாரமாக பழவேற்காடு எரியும், வங்காள விரிகுடா கடலும் இணையும் முகத்துவாரம் விளங்கி வருகிறது. முகத்துவாரம் அடைபட்டு மணல் திட்டுக்களாக மாறும் காலங்களில் எளிதில் படகுகளில் கடலுக்குள் செல்ல முடியாமலும், மீன்வளம், இறால் உள்ளிட்டவை கிடைக்காமல் மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.
அவ்வப்போது அடைபடும் முகத்துவாரத்தை சொந்த செலவில் தற்காலிகமாக மீன்வர்களே தூர்வாரி வரும் நிலையில் நிரந்தர முகத்துவாரம் ஏற்படுத்தி தர வேண்டும் என மீனவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து கடந்த 27கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிரந்திர முகத்துவாரம் அமைக்க தமிழக அரசு திட்டம் தயாரித்து பல்வேறு துறைகளின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.
இந்நிலையில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஒப்புதல் வழங்கிய நிலையில் கடந்த வாரம் பழவேற்காட்டில் நிரந்தர முகத்துவாரம் அமைக்க லைட் ஹவுஸ் பகுதியில் இருந்து முகத்துவாரம் வரையிலான 4.5 கி.மீ. வரையிலான நீரோட்ட வழிப்படுத்து சுவர் கட்டுவதற்கான பணிகளை திருவள்ளூர் எம்பி ஜெயகுமார், பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர். நிரந்தர முகத்துவாரம் அமைக்க வனத்துறை அனுமதி பெறுவதற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் படகில் சென்று பழவேற்காடு முகத்துவாரத்தில் நேரில் ஆய்வு செய்தார்.
பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராசன், வனத்துறை அதிகாரிகள், மீன்வளத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். முகத்துவாரத்தின் அவசியம் குறித்தும், முகத்துவாரம் அடைபடும் காலங்களில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் மீனவர்கள் வனத்துறை அமைச்சரிடம் முறையிட்டனர். விரைந்து அனுமதி பெற்று பணிகளை தொடங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மதிவேந்தன் சுற்றுச்சூழல் தொடர்பாக அனுமதி பெற வேண்டி உள்ளதாகவும், தேசிய பசுமை தீர்ப்பாயம் மற்றும், மாநில வனத்துறை அனுமதி நிலுவையில் இருப்பதாகவும், நீதிமன்ற தீர்ப்பிற்கு ஏற்ப நிரந்தர முகத்துவாரத்திற்கு அனுமதி வழங்குவது குறித்து அதிகாரிகளிடம் சாதக பாதகங்களை கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். பழவேற்காடு ஏரியில் பாதுகாப்பற்ற வகையில் படகு சவாரி நடைபெறுவது தொடர்பாக தற்போது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கடல் மணல் கொள்ளையை தடுப்பது குறித்தும் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu