சுடுகாடு அமைத்து தர குடியுரிமைகளை கீழே வீசி கிராம மக்கள் போராட்டம்..!
ரேஷன் கார்டு ஆதார் கார்டு உள்ளிட்ட குடியுரிமைகளை கீழ வீசி எதிர்ப்பு தெரிவிக்கும் கிராம மக்கள்
ஊத்துக்கோட்டை அருகே 25 ஆண்டுகளாக சுடுகாடு இல்லாமல் அவதிப்படும் மக்கள் தங்களது குடி உரிமைகளான குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை வீசி எறிந்து போராட்டம் நடத்தினர்.
சுடுகாடு இல்லாததால் குடும்ப உறுப்பினர்கள் எவரேனும் இறந்தால் சொந்த இடங்களிலேயே அடக்கம் செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குமுறுகின்றனர். அதனால் சுடுகாடு அமைத்துத் தர வேண்டி ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட குடியுரிமைகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூக்கி வீசி கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்த வேளகாபுரம் கிராமத்தில் 75 குடும்பங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் 25 ஆண்டுகளாக சுடுகாடு இல்லாமல் வசித்து வருகின்றனர். குடும்ப உறுப்பினர்கள் எவரேனும் இறந்தால் அவர்களுடைய சொந்த இடங்களில் அடக்கம் செய்து வருவதாகவும், இந்த கிராமத்தில் இதுவரை பொது சுடுகாடு இல்லை என்று கவலையோடு தெரிவித்தனர்.
இந்த கிராமத்தில் பொது சுடுகாடு ஏற்படுத்தித் தர ஊத்துக்கோட்டை வட்டாட்சியர், மற்றும் வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் பொது சுடுகாடு ஏற்படுத்தி தர வேண்டும் என்று கூறி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை உள்ளிட்ட குடியுரிமைகளை தூக்கி வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் மாவட்ட ஆட்சியர் எங்களுக்கு சுடுகாடு ஏற்படுத்தி தராவிட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu