100 நாள் வேலை வழங்க கிராம மக்கள் சாலை மறியல்..!

100 நாள் வேலை வழங்க கிராம மக்கள் சாலை மறியல்..!
X

சாலை மறியலில் ஈடுபாட்டிருந்த பெண்கள்.

திருவள்ளூர் அருகே 100 நாள் வேலை வழங்கவேண்டும் என்று கிராம மக்கள் திருப்பதி சென்னை சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் அருகே 100.நாள் வேலை வழங்கக்கோரி சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது ஒரு ஆம்புலன்ஸ் வந்தது.ஆம்புலன்ஸுக்கு வழி விட்ட பொதுமக்கள் பின் மீண்டும் மறியலில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருப்பாச்சூர் ஊராட்சியில் கடந்த 7 மாதமாக100.நாள் வேலை வழங்கப்படவில்லை எனக்கூறி 300-க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த பெண்கள்,ஆண்கள் என இன்று காலை திடீரென சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் இதனை ஏற்க மறுத்த கிராம மக்கள் இந்த 100 நாள் வேலை நம்பி வாழ்ந்து வருவதாகவும், தங்களுக்கு 100 நாள் வேலை உடனடியாக வழங்கிட வேண்டுமென கோஷங்கள் கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் அதிகாரிகள் தங்களின் பிரச்சனையை உரிய அதிகாரிகளிடம் தெரிவித்து விரைவாக வேலை வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பெயரில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.இந்த மறியல் போராட்டத்தால் சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!