பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்..!

வேட்பு மனு தாக்கல் செய்த பகுஜன் கட்சி வேட்பாளர்
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை அமல்படுத்தினால் அனைத்து மக்களுக்கும் சமத்துவம் கிடைக்கும் என்பதே எங்களின் நோக்கம் என பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் தமிழ் மதி பேட்டி அளித்தார்.
திருவள்ளூர் தனி நாடாளுமன்ற தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் போட்டியிடும் டி.தமிழ்மதி கட்சி முக்கிய நிர்வாகிகளுடன் இணைந்து மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான த.பிரபுசங்கரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
அவருடன் பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட தாலைவர் பிரேம்குமார், மாநில செயலாளர் பெரியார் அன்பன், தேவா, உள்ளிட்டோர் இந்த வேட்பு மனு தாக்களின் போது உடனிருந்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வேட்பாளர் டி. தமிழ்மதி இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை அமல்படுத்தினால் மட்டும் போதும் அனைத்து மக்களுக்கும் சமத்துவம் கிடைக்கும் எல்லா மக்களுக்கும் கல்வி, பொருளாதாரம் என வாழ்வதற்கான தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் கிடைக்க வேண்டும் என்பதே பகுஜன் சமாஜ் கட்சியின் நோக்கம் என வேட்பாளர் டி. தமிழ்மதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu