கர்நாடக அரசை கண்டித்து ஒரக்காடு கிராமசபை கூட்டத்தில் பரபரப்பு தீர்மானம்
தமிழகத்திற்கு காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், தமிழக முதல்வரை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதற்கும் கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட ஒரக்காடு ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கடந்த ஏப்ரல் 01.ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 வரையிலான ஊராட்சிமன்றத்தின் வரவு செலவு விவரங்கள் அடங்கிய அறிவிப்பு பலகை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து ஊராட்சிமன்ற தலைவர் நீலா சுரேஷ், கர்நாடக அரசை கண்டித்து தீர்மானம் கொண்டு வந்தார்.அதில் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு காவிரி நதிநீரை தமிழகத்திற்கு தரவேண்டும் என உச்சநீதிமன்றம், காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் அந்த உத்தரவை கர்நாடகா அரசு உதாசீனப்படுத்தி அதனை மதிக்காமல் தமிழகத்திற்கு காவிரி நதிநீரை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
மேலும் கர்நாடக மாநிலத்தில் தமிழக முதல்வரை அவமதிக்கும் விதத்தில் நடந்து கொண்டதற் கும், தமிழக வாகன ஓட்டுநர்களை கர்நாடகாவில் அடித்து தாக்கப்படுவதையும், இத்தகைய அராஜப்போக்கை செய்யும் கண்டித்தும் தீர்மானம் ஏகமனதான நிறைவேற்றப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu