மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற மூதாட்டியை மழையில் காக்க வைத்த அவலம்..!

மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற மூதாட்டியை மழையில் காக்க வைத்த அவலம்..!
X

சிகிச்சைக்காக  வந்த மூதாட்டியை நீண்ட நேரம் காக்க வைத்து சிகிச்சைக்கு அழைத்துச் செல்லும் மருத்துவமனை ஊழியர்கள்.

திருவள்ளூரில் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற போது மழையில் காக்க வைத்த சம்பவம் பரபரப்பு.

திருவள்ளூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்‌ சிகிச்சைக்காகச் சென்ற 72 வயது மூதாட்டியை மழையில் காக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் அடுத்த நேமம் பகுதியைச் சேர்ந்தவர் ரமணி என்ற (வயது 72).மூதாட்டிக்கு உடல் நலக்குறைவு காரணமாக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அப்போது அவசர பிரிவில் சிகிச்சை அளித்த மருத்துவர் சிடி ஸ்கேன் எடுத்துவரச் சொல்லி பரிந்துரைத்துள்ளார். இதனை அடுத்து மருத்துவமனை காவலாளி ஒருவர் மூதாட்டியை ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து தள்ளிச் சென்றுள்ளார்.

அங்கு ஸ்கேன் எடுப்பதற்காக பணம் கட்டி அதற்கான ரசீதை கொண்டு வந்தால் மட்டுமே ஸ்கேன் எடுக்கப்படும் என கூறியதால் அவரது மகன் பணம் கட்டச் சென்றுள்ளார். இந்நிலையில் மழை பெய்து கொண்டிருந்தபோது காவலாளி ஒருவர் அவருக்கு மட்டுமே குடை பிடித்தவாறு நின்றுள்ளார்.

மூதாட்டி மீது போர்வை ஒன்று போர்த்திய நிலையில் மழையில் நனைந்தவாறு கிட்டத்தட்ட 20 நிமிடம் கழித்து மகன் ஸ்கேன் எடுப்பதற்கான பணம் செலுத்தி சீட்டை எடுத்து வந்த காட்டிய பிறகு பின்பு மூதாட்டியை ஸ்கேன் எடுக்க உள்ளே அனுமதித்துள்ளனர். இந்த சம்பவத்தால் மருத்துவமனையில் உள்ள பொதுமக்கள் இடையே பரபரப்பு ஏற்படுத்தியது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil