குப்பை தீவைக்கும்போது சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உயிரிழப்பு..!

குப்பை தீவைக்கும்போது சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உயிரிழப்பு..!
X

கோப்பு படம் 

திருவள்ளூர் அருகே குப்பை எரித்துக் கொண்டிருந்த மூதாட்டியின் சேலையில் தீப்பிடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருவள்ளூர் அருகே குப்பைகளை எரித்த போது சேலையில் தீ பிடித்து சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருவள்ளூர் அடுத்த இருளஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி கல்யாணி ( வயது 74 ).இவரின் வீட்டில் சேகரித்து வைத்திருந்த குப்பைகளை வீட்டில் பின்னால் கொட்டி கடந்த மாதம் 30 ந் தேதி மாலை 5:30 மணியளவில் எரித்துள்ளார். அப்போது காற்று அதிக வேகமாக வீசியதால் எரிந்து கொண்டிருந்த தீ மூதாட்டியின் சேலையில் பிடித்து மளமளவென தீ பற்றிக்க கொண்டது.

மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மூதாட்டியை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.


பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.இந்த நிலையில் சிகிச்சையில் இருந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பாக மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குப்பைகளை தீயிட்டு எரித்த போது சேலையில் தீப்பிடித்து சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது இருளஞ்சேரி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!