சொந்த செலவில் உயர் கோபுரம் மின் விளக்கு அமைத்த வடமதுரை ஊராட்சித்தலைவர்
வடமதுரை ஊராட்சிமன்ற தலைவர் காயத்ரி கோதண்டன் தனது சொந்தச்செலவில் அமைத்த மின்விளக்குகளை ஸ்விட்ச் ஆன் செய்து இயக்கி வைத்தார்
பெரியபாளையம் அருகே வடமதுரை ஊராட்சியில் இரண்டு இடங்களில் உயர் கோபுர மின் விளக்குகளை ஊராட்சி மன்றத்தலைவர் தனது சொந்த செலவில் அமைத்து தந்தார்.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அடுத்த வடமதுரை ஊராட்சியில் உள்ள பெரிய காலனி,எர்ணாக்குப்பம் ஆகிய 2 இடங்களில் எல்.இ.டி பல்புகளுடன் கூடிய உயர் கோபுர மின் விளக்குகள் அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில்,ஊராட்சிமன்ற தலைவர் காயத்ரி கோதண்டன் தனது சொந்த செலவில் மேற்கண்ட இடங்களில் தலா ரூ.3.35 லட்சம் செலவில் மொத்தம் ரூ.6.70 லட்சம் செலவில் 2 உயர்கோபுர மின்விளக்குகளை அமைத்துத் தந்தார்.
இதனை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு இயக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஊராட்சிமன்ற தலைவர் காயத்ரி கோதண்டன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மின்விளக்குகளை ஸ்விட்ச் ஆன் செய்து இயக்கி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில், ஊராட்சிமன்றத் துணைத்தலைவர் பாக்கியலட்சுமி ரமேஷ், வார்டு உறுப்பினர்கள் கிரிஜா விஜயகுமார், பி.ரமேஷ், பி.சேட்டு மற்றும் முக்கிய பிரமுகர்களான ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் குமார், மல்லியங்குப்பம் ராஜேஷ், தயாநிதி, கஜேந்திரன், முன்னாள் துணைத்தலைவர் ஜெயமணி தனசேகர், பரந்தாமன், ஹரிபாபு, டில்லி பாபு, ஜோதி, பார்த்திபன், பாபு ஆகியோர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் அப்பகுதியில் உள்ள மக்கள் கூறுகையில் நீண்ட நாளாக இப்பகுதியில் உயர் கோபுரம் மின்விளக்குகளை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தோம். இதனை ஏற்று தன் சொந்த செலவில் எங்கள் பகுதிக்கு உயர் கோபுர மின்விளக்குகளை அமைத்து தந்ததாகவும் ஊராட்சியில் எந்த மக்கள் பிரச்னை இருந்தாலும் உடனடியாக வந்து தேவையற்ற பணிகளை செய்து தருவதில் முதன்மை ஆனவர் என்று அப்பகுதி மக்கள் பெருமிதம் தெரிவித்தனர். எனவே ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி கோதண்டனுக்கு தாங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினர். முடிவில் ஊராட்சி செயலர் கல்பனா விஜயகுமார் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu