குடியிருப்புக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர பொதுமக்கள் கோரிக்கை..!

குடியிருப்புக்குத் தேவையான அடிப்படை வசதிகள்  செய்து தர பொதுமக்கள் கோரிக்கை..!

தெருவில் ஓடும் கழிவுநீர் 

திருவள்ளூர் அருகே திருநின்றவூரில் வசித்து வரும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

திருவள்ளூர் அருகே ஆறு வருடங்களாக வசித்து வரும் பொது மக்களுக்கு சாலை வசதி, கழிவுநீர் கால்வாய், உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதியும் ஏற்படுத்தி தராததால் குடியிருப்பு வாசிகள் கடும் அவதிப்பட்டு வருவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

குடியிருப்புக்குச் செல்லும் பாதை.

திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் நத்தம்பேடு ஊராட்சி ஜியோனி நகர் பகுதியில் (சிஎம்டிஏ) எனப்படும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் அனுமதியுடன் விற்பனை செய்யப்பட்ட வீட்டுமனை பிரிவில் தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வீடுகள் கட்டி வசித்து வருகின்ற நிலையில் கடந்த ஆறு ஆண்டுகளாக அப்பகுதியில் கழிவு நீர் கால்வாய் கட்டித் தரவில்லை என்று சாலை வசதியை அமைத்து தரவில்லை என்றும் கூறுகின்றனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகியிடமும் அரசு அதிகாரிகளிடமும் கோரிக்கை வைக்கப்பட்டு மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அப்பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் கட்டப்படாததால் அப்பகுதியில் சில வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் காலி மனைப் பிரிவில் தேங்கி நிற்கிறது. இதனால் அதிக துர்நாற்றம் வீசுகிறது.

குடியிருப்பு வாசிகளில் சிலர்.

மலேரியா, டெங்கு, போன்ற தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மழைக்காலங்களில் அப்பகுதியில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி நிற்பதாகவும் அந்த தண்ணீருடன் கழிவு நீரும் கலந்து வீடுகளுக்குள் வந்து கடும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகும், மேலும் உடல்நிலை சரியில்லாத முதியவர்கள், நோயாளிகள் கர்ப்பிணி பெண்கள்‌,அழைத்துச் செல்வதற்காக அப்பகுதிகளில் ஆட்டோக்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட உள்ளே‌ வர முடியாத அளவுக்கு சாலைகள் சீரமைக்க படாததால் சேரும், சகதியாக, இருப்பதாக ‌பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

குடியிருப்பைச் சுற்றிலும் கழிவு நீர்

மேலும் ‌ மழை தண்ணீர்,மற்றும் கழிவுநீர்கள் வீடுகள் சுற்றி தேங்கி நிற்பதால் வீடுகளுக்குள் பாம்பு, தேள், தவளை போன்ற விஷ பூச்சிகள் வீட்டுக்குள் நுழைவதாகவும் ‌ பாதிப்பு இல்லாத வாழ்க்கை வாழ்வதாகவும் கூறுகின்றனர். பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் வானவில் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ஆனால் ஊராட்சி நிர்வாகமானது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

எனவே மாவட்ட ஆட்சியர் எங்கள் பகுதியை நேரில் வந்து ஆய்வு செய்து எங்களுக்கு உதவுமாறு அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story