திருவள்ளூர் அருகே புதிய சேமிப்பு கிடங்கு: காணொளியில் முதல்வர் திறப்பு
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆபிஸ் ஜான் வர்கீஸ் குத்து விளக்கு ஏற்றி மரக்கன்றுகள் நட்டு பணிகளை துவக்கி வைத்தார்
திருவள்ளூர் மாவட்டதில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் நெல்லை 3000 மெட்ரிக் டன் அளவிற்கு பாதுகாப்பாக சேமிக்கும் நவீன சேமிப்பு தளத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்
கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் திருவள்ளூர் மாவட்டதில் சுமார் 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு ஊத்துக்கோட்டை குருபுரம் கிராமத்தில் முதல் கட்டமாக 3000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் மூன்று நவீன சேமிப்பு தளம் முதல் கட்டமாக2 கோடி 81 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டது.அதனை இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆபிஸ் ஜான் வர்கீஸ் குத்து விளக்கு ஏற்றி மரக்கன்றுகள் நட்டு பணிகளை துவக்கி வைத்தார். இதில் கூட்டுறவு மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் விவசாயிகள் பங்கேற்றனர்.விவசாயிகளுக்கு ஆட்சியர் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை தெரிவித்தார் விவசாயிகள் நெல் சேமிப்பு தளம் திறக்கப்பட்டதற்கு ஆட்சியருக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.
இங்கு சேமிக்கப்படும் நெல்லை அரவை செய்ய அரசு மூலம் தனியார் அரிசி ஆலைகளில் கூடுதலாக அரவை செய்யவும் முடிவு செய்யப்படும்.எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார் .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu