புதிய பள்ளி கட்டிடங்கள் திறப்பு

புதிய பள்ளி கட்டிடங்கள் திறப்பு
X
எல்லாபுரம் ஒன்றியத்தில் உள்ள நான்கு ஊராட்சியில் புதிய பள்ளி கட்டிடங்கள் திறக்கப்பட்டது

எல்லாபுரம் ஒன்றியத்தில் ஏனம்பாக்கம், கிருஷ்ணாபுரம் கண்டிகை, பெத்தநாயக்கன்பேட்டை, அத்தங்கிகாவனூர் ஆகிய நான்கு ஊராட்சிகளில் கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்களை முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்தில்,16 தொடக்கப்பள்ளி கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு கலைஞரின் பிறந்தநாள் அன்று திறக்க திட்டமிட்டு இருந்தனர்.இந்நிலையில், கன்னிகைப்பேர் ஊராட்சி கிருஷ்ணாபுரம் கண்டிகை, பெத்தநாயக்கன்பேட்டை, அத்தங்கி காவனூர், ஏனம்பாக்கம் ஆகிய 4 இடங்களில் கட்டி முடிக்கப்பட்ட தொடக்கப்பள்ளி கட்டிடங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இந்நிலையில், ஏனம்பாக்கம் ஊராட்சியில் ரூ.28 லட்சத்தில் தொடக்கப்பள்ளி கட்டிடம்,ரூ.7.43 லட்சத்தில் சமையல் கூடம் என மொத்தம் ரூ.35 லட்சத்து 43 ஆயிரம் செலவில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதனை அடுத்து ஏனம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ஜே.பாபு பள்ளி வளாகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதன் பின்னர், வட்டார வளர்ச்சி அலுவலர்(வட்டார ஊராட்சிகள்) நடராஜ் குத்து விளக்கேற்றினார்.

வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) சத்தியமூர்த்தி பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் இனிப்பு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலக பொறியாளர் நரசிம்மன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பிரீத்தா ராஜீவ்காந்தி,வார்டு உறுப்பினர்கள் முருகன், மங்கம்மா, சுப்பிரமணி,மணி,பள்ளி தலைமை ஆசிரியர் மதுமொழி, உதவி ஆசிரியர் செந்தில்குமார், வட்டார கல்வி அலுவலர் கல்பனா, சாது சுந்தர் சி.சுரேஷ், ஊராட்சி செயலர் நித்தியா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்


Tags

Next Story
இது நல்ல இருக்கே, எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரிக்கு 8 வருஷம் வாரன்டியா !